English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Compliant
a. கீழ்ப்படிகிற, இணங்குகிற, நெகிழ்வுடைய, விட்டுக் கொடுக்கிற.
Complicacy
n. சிக்கலான நிலை.
Complicate
a. சிக்கலான, சிக்கிக்கிடக்கிற, உள் மடித்துப் பின்னிக்கிடக்கிற, குளறுபடியான, (வி.) சிக்கலாக்கு, முறுக்கு, பின்னு, மாட்டவை, சிக்கவை.
Complicated
a. சிக்கலான, புரியாத, குழப்பமான.
Complication
n. சிக்கலான கலப்பு, பின்னல் கோளாறு.
Complicative
n. சிக்கலாக்கும் இயல்புடைய.
Complicity
n. சிக்கியிருத்தல், உடந்தைமை, குற்றப் பொறுப்பில் பங்கு, சிக்கல் தன்மை.
Compliment
-2 v. இன்புகழ்ச்சி கூறு, நுண்ணயத்துடன் முகப்புகழ்ச்சி செய், நேசமதிப்புத் தெரிவி, பாராட்டு, மகிழ்ச்சி தெரிவி, அன்பளிப்புச் செய்.
Compliment, n.
-1 முகமன், இன்புகழ்ச்சியுரை, நயநாகரிக மொழி, ஆசாரமொழி, உபசார வார்த்தை, நுண்ணயம் வாய்ந்த முகப்புகழ்ச்சி, ஆசாரநடைமுறை, பரிசு.
Complimental
a. புகழ்ச்சி தெரிவிக்கிற, நேசப்புகழ்ச்சியான.
Complimentary
a. புகழ்ச்சி தெரிவிக்கிற, பாராட்டு முறையான, அன்பளிப்பான, இலவசமான.
Complin, compline
நாளின் கடைசி ஆராதனை, துயில் கொள்ளும் முன் ஓவம் செபம்.
Complxion
n. இயல் நிறம், மேனி வண்ணம், உடலின் புறத்தோற்றம், முகத்தோற்றம், தோற்றம், மனநிலை, குணம், பண்பு, (வி.) நிறங்கொடு.
Comply
v. பிறர் விருப்பத்திற்கு இணங்கச் செயலாற்று, இசைந்து கொடு, உடன்படு.
Compo
n. சிமிட்டி கலந்த காரை, சுவரை அழகு செய்யும் பசைக் கலவைப் பொருள், கடன் தீர்க்க வகையற்றவரிடம் கடன் கொடுத்தோர் பெற்றுக்கொள்ளும் நுற்றுவீழ்ம்.
Component
n. ஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
Comport
n. நடத்தை, (வி.) இணங்கு, இசைவுறு, மதிப்புடன் நடக்கும்படி செய், தகுதியுடன் நடந்துகொள்ளுவி.
Comportment
n. நடைநயம், நடந்துகொள்ளும் முறை, நடத்தை.
Compos mentis
a. (ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய, அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள.
Compose
v. இணைந்து ஆக்கு, ஒன்றுபட்டு உருவாக்கு, சொற்களை இணைத்துப் பாட்டியற்று, யாப்பமைதிப்படுத்து, பண் புனைந்து உருப்படுத்து, பாட்டிசைப்படுத்து, கருத்துருவாக்கு, சொல்லமைதிப்படுத்து, அச்சுக்கோத்திணை, அச்சுருப்படுத்து, இணக்கமாக்கு, பிணக்குத்தீர்த்துவை, அமைதிப்படுத்தி, முன்னேற்பாடு செய்தமை.