English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Comprehensible
a. புரிந்துகொள்ளக்கூடிய, அறிந்து கொள்ளத்தக்க, உட்கொள்ளத்தக்க.
Comprehension
n. உணர்வாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை, இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல், சொல்லின் பொருள்கவிவு ஆற்றல், (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி.
Comprehensive
a. உணர்வாற்றல் சார்ந்த, புரிந்துகொள்ளும் திறனுள்ள, கவியாற்றல் மிக்க, விரிபொருள் அகப்படுத்தவல்ல, அகல் விரிவான, அகல் பெருந்தொகுதியான.
Compress
-1 n. உறுப்புகட்கு அழுந்தந்தரப் பயன்படுத்துப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி, வீக்கமடக்கக் கட்டும் நீர் தலையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்துணி.
Compress
-2 v. நெருங்கி அழுத்து, சிறு இடத்திற்குள் திணித்துச் செலுத்து, சுருக்கு, திட்பம் மிகுவி, செறிவி, அடர்த்தியாக்கு.
Compressed
a. சேர்த்து அழுத்தப்பட்ட, நெருக்கமாக அமைக்கப்பட்ட, (உயி.) பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட.
Compressibility, compressibleness
n. அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை, பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம்.
Compressible
a. அழுத்தக்கூடிய, சுருக்கக்கூடிய.
Compression
n. அழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
Compressive
a. அழுத்தக்கூடிய, அடர்த்தியாக்குகிற, நெருக்கித் தட்டையாக்கக்கூடிய.
Compressor
n. அழுத்தும் கருவி, அமுக்கம் பெருக்கும் இயந்திரப் பகுதி, அழுத்தும் தசைநார்.
Comprisal
n. உட்கொண்டிருத்தல், உள்ளடக்கமாக் கொள்ளுதல், பாகமாகப் பெற்றிருத்தல்.
Comprise
v. உட்கொண்டிரு, உள்ளடக்கமாகக் கொண்டிரு, உட்கூறாகக் கொண்டிரு, ஆக்கக்கூறாக்கு.
Compromise
n. சமரச இணக்கம், இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு, சமசர விட்டுக்கொடுப்பு, இளக்காரச்சலுகை, இடைநிலைப்பாடான ஒன்று, இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி, (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு, உடன்படு, ஒப்பந்தம் செய், விட்டுக்கொடு, கவர் நிலைக்கு ஆளாக்கு, ஐயுறவு நிலைக்கு உட்படுத்து.
Comprovincial
n. சமயவட்டத்தலைவர் வகையில் அதே மாகாணத்தைச் சேர்ந்தவர்.
Comptible
a. இணைவொத்த, ஒத்தியலக்கூடிய, ஒன்றுபடனொன்று இணையக்கூடிய.
Comptroller
n. கணக்குத் தணிக்கையாளர், தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
Compulse
v. கட்டாயம்பண்ணு.
Compulsion
n. வலுக்கட்டாயம், வல்லந்தம், நிர்ப்பந்தம்.
Compulsionist
n. வலுக்கட்டாயம் செய்வதில் நம்பிக்கையுள்ளவர்.