English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Con
-4 n. நம்பிக்கையார்வம், (வி.) நம்பிக்கைமோசம் செய், ஏமாற்று.
Con amore
adv. (இத்.) ஆர்வத்தோடு, பற்றார்வுடன்.
Conacre, cornacre
அயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை, (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு.
Conation
n. செயல் துணிவாற்றல், விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல்.
Conatus
n. முயற்சி, உள் தூண்டுகை, போக்கு, சார்பு.
Concatenate
v. தொடராக இணை, தொடர்புபடுத்து, சங்கிலிபோல் தொடு, கோவைப்படுத்து.
Concatenation
n. கண்ணிகளின் தொகுதி, சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை.
Concave
n. உட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு.
Concavity
n. உட்குழிவு நிலை, பள்ளம்.
Concavo-concave
a. இருபக்கங்களும் உட்குழிவான.
Concavo-convex
a. ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வௌதக்குவிவான.
Conceal
v. முழுதும் மறை, நன்கு மறைத்துவை, மறை வடக்கமாக வைத்திரு, மாற்றுருக்கொள், வௌதயிடாதிரு, மறையடக்கு.
Concealment
n. மறைத்தல், மறைவடக்கம், ஔதவு மறைவு, மாற்றுருவம், மறைவிடம், பதுங்கிடம்,
Concede
v. எதிர்ப்பின்றி விட்டுக்கொடு, சலுகையளி, அட்டியில்லாமல் ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்.
Conceit
n. இறுமாப்பு, போலித் தற்பெருமை, தற்செருக்கு, கருத்துப்படிவம், கற்பனை, தற்புனைவு, சொல்திறம், திறம்பட்ட கருத்து, வீணெண்ணம், போலிக் கருத்து, செயற்கைக் கற்பனை, போலிப் புனைவு, செயற்கை அணி, போலி நயம், மதிப்பீடு, பாவனை, (வி.) புனைந்து கற்பி, இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Conceited
a. போலித் தற்பெருமையுடைய, செருக்குள்ள, இறுமாப்புடைய, தன்முனைப்புள்ள, ஆணவமுடைய.
Conceity
a. இறுமாப்பு வாய்ந்த.
Conceivable
a. கருதத்தக்க, எண்ணிப்பார்க்கக் கூடிய, மனத்தால் பாவிக்கவல்ல.
Conceive
v. கருக்கொள், சூலுறு, கருது, கருத்தில் உரவாக்கு, பாவனை செய், எண்ணிப்பார், உணர், புரிந்து கொள், கருத்துப்பற்றிக்கொள், சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு.