English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Composed
a. தணிந்த, தீர்ந்துபோன, அமைந்த, அமைதியான.
Composer
n. இசைப்பாடல் ஆக்குவோர், பண்மைப்பாளர், எழுத்தாசிரியர், ஏட்டாசிரியர்.
Composing-stick
n. அச்சுக்கட்டை, பெட்டி போன்ற அச்சுக்கோப்புக் கருவி.
Composite
n. பல சேர்ந்தமைந்த பொருள், சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி, (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த, பல்வகை தொக்க, (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற, (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
Composition
n. இணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Compositive
a. இணைகிற, சேருகிற.
Compositor
n. அச்சுக்கோப்பவர்.
Compossible
a. ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய, மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
Compost
n. கலப்பு உரம், இணைப்பு, கலவை, (வி.) கலப்பு உரமிடு, கூட்டு உரம் உண்டுபண்ணு.
Composure
n. தன்னிறைவமைதி, சமநிலையமைதி, அமைவடக்கம்.
Compot
n. தேம்பாகில் பதனம் செய்யப்பட்ட பழம்.
Compotation
n. கூட்டமாக மதுக்குடித்தல்.
Compotator
n. குடிகாரத் தோழன்.
Compound
அரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
Compound
-1 n. பல்சினைப்பொருள், பல கூறுகளடங்கிய திரள், பல் பொருட் கூட்டு, (வேதி.) சேர்மானம், ஆக்கக் கூறுகள் தம் இயல்மீறிய புதுப்பண்புகளையுடைய புதுப்பொருளாகும் நிலையுடைய கலவை, சொற்கூட்டு, தொகை மொழி, (மரு.) கூட்டுச்சரக்கு, (பெ.) பலகூறுகளால் ஆக்கப்பட்ட, பல பகுதிகளைக்
Compound
-2 v. கலந்து இணை, சேர்த்து ஒன்றுபடுத்து, இருதரப்பும் ஒருங்கொத்து முடிவுப்ண், குற்றச்சாட்டு வழக்கை ஏதேனும் நலம்பெற்றுப் பின்வாங்க இணங்கு, சமரசத்துக்கு ஒத்துப்போ, உடன்பாட்டுக்கு இசை, மொத்தப் பேரம் செய்.
Compound
-3 n. வளாகம், வீட்டைச்சுற்றிய மதிலக வளைவு.
Compounder
n. மருந்துகலப்பவர்.
Comprador, compradore
n. சீன வணிகருடன் வாணிகம் செய்ய ஐரோப்பிய வாணிகக் கழகங்கள் பயன்படுத்தும் இடையாள், ஐரோப்பிய வாணிகக் கழகங்களின் சீன வேலையாள்.
Comprehend
v. மனத்தால் பற்று, தெரிந்துகொள், புரிந்து கொள், அறி, உட்கொள், தன்னகம்படக் கொள்.