English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Congeneric, congenerical
a. ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே இனமரபுடைய, ஒரே வகைப்பட்ட, தன்மையில் ஒத்த.
Congenerous
a. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஒரேவகையைச் சேர்ந்த, ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Congenetic
a. மூலத்தில் ஒத்த, ஒரே தோற்ற மூலத்தை உடைய.
Congenial
a. இன அமைவுடைய, உறவமைதி வாய்ந்த, ஒத்துணர்வுள்ள, மனதுக்கொத்த, உகந்த, இசைவான.
Congenital
a. பிறவியோடுபட்ட, கருமுதலமைவுடைய, பிறவிக்கூறான.
Conger
-1 n. விலாங்கு இனத்தைச் சேர்ந்த பெரிய கடல்மீன் வகை.
Conger
-2 n. கூட்டுறவாகப் புத்தகம் விற்பவர்களின் கழகம்.
Congeries
n. திரள், தொகை, பிண்டம், குவியல், தொகுதி.
Congest
v. மட்டுமீறி ஓரிடத்தில் குவி, அடர்த்தி மிகுதியாக்கு, நெருக்கடிப்படுத்து.
Congested
a. மட்டுமீறி நெருக்கமிக்க, அடர்த்தியான, மிகச்செறிவான, நெருக்கடியான, செம்மிய, இயங்க முடியாமல் தடைப்பட்ட, வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட, இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Congestion
n. (மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி, நெருக்கடி, அடர்த்தி.
Congestive
a. மட்டுமீறிய செறிவுகொண்டுள்ள, இட நெருக்கடிக்குரிய.
Conglobate
n. உருண்டையாக உருவாக்கப்பட்ட, (வி.) உருண்டையாக்கு, பந்துபோலாகு.
Conglobe
v. உருண்டையாகத் திரள், உருண்டையாகத் திரட்டு.
Conglobulate
v. சிறு உருண்டையாகத் திரள்.
Conglomerate
n. கதம்பத்திரள், பல்கூட்டுத் திரட்டு, (மண்.) பல்கூட்டுப்பாறை, கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை, (பெ.) உருண்டு திரண்ட, பல்கூட்டுருவான, (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான, (வி.) உருண்டு திரண்டு உருவாகு, பல்கூட்டாகத் திரட்டு.
Conglomeratic
a. (மண்.) கூட்டுப்பாறையின் இயல்புள்ள.
Conglomeration
n. திரளை, பந்துபோல் திரப்பப்பட்ட நிலை, பல பட்டடைக்குவை, கதம்ப கூளம்.
Conglutinate
v. பசைகொண்டு ஒட்டு, பசையினால் ஒட்டிக்ககொள், இணைவித்துக் குணப்படுத்து, ஒன்றுபடு, ஒன்றுபட்டு வளர்.
Conglutination
n. பசைப்பொருளைக்கொண்டு இணைத்தல், இணைவித்துக் குணப்படுத்துதல்.