English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Confraternity
n. தோழமைக் கூட்டுறவு, உடன்பிறப்புரிமைக் குழாம், உடன்பிறப்புரிமை, குலம், குடியுரிமைக் குழு.
Confrere
n. (பிர.) தொழிற்கூட்டாளி, கலைக்குழுத்தோழர்.
Confront
v. எதிர்முகமாக நில், எதிரெதிராயிரு, எதிப்படு, சந்தி, நேர் எதிர்ப்புறமாயிரு, எதிர்த்து நில், முரணு, நேருக்குநேர் நிறுத்து, எதிர்முகப்படுத்து, ஒப்பிட்டு நோக்கு.
Confrontation
n. நேருக்குநேர் சந்திக்கச் செய்தல், எதிர்ப்படுதல்.
Confronte
a. நேருக்குநேரான.
Confucian
n. பண்டைச் சீனநாட்டு மெய்விளக்கியலாரான கன்பூசியசை பின்பற்றுபவர், (பெ.) கன்பூசியஸ் என்ற பண்டைச் சீன மெய்விளக்கியலாரைச் சார்ந்த.
Confucianism
n. கன்பூசியசின் மெய்விளக்கியல், கன்பூசியசின் கோட்பாடு, கன்பூசியஸ் நெறி.
Confucianist
n. சீனநாட்டு மெய்விளக்கியலாரான கன்பூசியசைப் பின்பற்றுபவர்.
Confuse
v. தாறுமாக்கு, அலங்கோலமாக்கு, மனத்தைக் குழப்பு, மலைப்பூட்டு, வெட்கச் செய்.
Confused
a. குழப்பமான, அலங்கோலமான, மலைப்புற்ற.
Confusedly
adv. குழம்பிய நிலையில், தாறுமாறாக.
Confusedness
n. குழம்பிய நிலை, சீர்குலைவு.
Confusion
n. குழப்புதல், குழப்பம், குழம்பிய நிலை, சந்தடி, மனக்குழப்பம், வெட்கம், திகைப்பு, கலக்கம், குலைவு.
Confutative
a. மறுக்கும் நோக்கமுடைய.
Confute
v. தவறு எண்பித்துக்காட்டு, வாதம் தவறென்று தௌதவுபடுத்து, மறுத்துரை.
Conge
n. (பிர.) தலைதாழ்த்தல், வணக்கந் தெரிவித்தல், விடையளிப்பு, உபசரிப்பின்றி அனுப்பிவைத்தல், (வி.) தலைதாழ்த்து, வணக்கம் செய், விடைபெறு.
Conge delire
n. (பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி, மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு.
Congeal
v. உறையச்செய், குளிரால் கெட்டியாக்கு, குருதி கட்டுவி, குளிரினால் கெட்டியாகு, உறை, இறுகு, குருதி கட்டு.
Congelation
n. உறைதல், உறையவைத்தல், உறைந்த நிலை, உறைந்த பொருள்.
Congener
n. ஒரே வகைப்பட்டவர், ஒரே தன்மையுடையவர், ஒரே வகைப்பட்டது, ஒரே தன்மையுடையது, ஓரினப்பொருள், (பெ.) ஒரே வகைப்பட்ட, இனத்தொடர்புடைய.