English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Conjugational
a. இணைந்த, இணைவான, கலந்திணைவது பற்றிய.
Conjugative
a. கலந்திணையும் பாங்குள்ள.
Conjunct
n. மற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள், (பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட, இணைக்கப்பட்ட, இணைந்தியல்கின்ற, கூட்டிணையான.
Conjunction
n. சந்திப்பு, இணைப்பு, நிகழ்ச்சிகளின் இணைவு, ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி, தொடர்புடைய மக்கள் கும்பு, தொடர்புடைய பொருள்களின் குவை, (இலக்.) இணையிடைச்சொல், சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல், (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Conjunctional
a. இணையிடைச் சொல்லுக்குரிய.
Conjunctiva
n. (ல.) (உள்.) இமையிணைப்பு, இமையினைப் படலம், புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் படலம்.
Conjunctival
a. (உள்.) இமையிணைப் படலத்துக்குரிய.
Conjunctive
n. இணைக்கும் சொல், (பெ.) நெருங்கி இணைந்த, இணைக்கப்பயன்படுகிற, சேர்க்கிற, (இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற, இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள, இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட.
Conjunctivitis
n. (மரு.) இமையிணைப் படலத்தின் அழற்சி.
Conjunctly
adv. கூட்டாக, ஒன்றுசேர்ந்து.
Conjuncture
n. நிகழ்ச்சிகளின் இணைவு, சூழ்நிலை இணைவு, முக்கிய தறுவாய், நெருக்கடி.
Conjuration
n. சதிச்செயல், தெய்வப்பெயர் சொல்லி அழைத்தல், நிறைமொழி பகர்ந்து அழைத்தல், மந்தரிப்பு, மணமார்ந்த வேண்டுகோள்.
Conjure
-1 v. சாலவித்தை செய், வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள், மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து, மாயத்துக்குட்படுத்து, செப்பிடு வித்தைகளால் விளைவி, மனக்கண்முன் கொண்டுவா.
Conjure
-2 v. தெய்வப்பெயர் சொல்லிக்கூப்பிடு, வேண்டி வற்புறுத்து, மன்றாடிக்கேள், மனமார வேண்டிக்கொள்.
Conjurement
n. ஆணைவழிப்படுத்தல், சூளுரைத்து ஏவுதல்.
Conjurer
n. செப்பிடு வித்தைக்காரர், மந்திரவாதி.
Conjuring
n. மாயவித்தை செய்தல், அற்புதம்போல் காட்டி விளைவுகளை உண்டாக்குதல்.
Conjuror
n. பிறருடன் ஒத்து ஆணைவழிக் கட்டுப்பட்டவர்.
Conjury
n. மாயவித்தை, செப்பிடு வித்தை.