English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Connivance, connivancy
n. கண்டுங்காணாததுபோல் இருத்தல், உட்கையாயிருத்தல், மறைமுக ஆதரவு.
Connive
v. கண்டுங்காணாது போலிரு, உட்கையாயிரு, மறைமுக ஆதரவு கொடு, (உயி.) குவி, ஒருமுகப்படு.
Connivent
a. (தாவ.) படிப்படியாய்க் குவிகிற.
Conniver
n. உட்கையாள், உள்ளாள்.
Connoisseur
n. சுவைத்திற வல்லுநர், கலை-பண்பாடு-சுவை முதலிய வற்றின் திறனாய் நடுவர்.
Connoisseurship
n. சுவைத்திறனாய்வுடைமை, கலைப்பண்பறிஞரின் திறன்.
Connotate
v. பண்புக்கூறுகளைக் குறிப்பிலுணர்த்து.
Connotation
n. சொல்லில் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக் கிடக்கும் பொருள், சொல் குறிக்கும் பண்புகளின் திரள்.
Connote
v. மூலக்கூறாக உய்த்துணரவை, பின்விளைவாகக் குறிப்பிடு, உள்படுத்து, அகப்படுத்து, உள்ளார்ந்த பண்புகளைக் குறிப்பிலுணர்த்து, துணைப்பண்புகளைச் சுட்டி உணரவை, பொருள்படு, (அள.) பருப்பொருள் சுட்டுவதன்றிப் பண்புத்தொகுதி உணர்த்து.
Connubial
a. திருமணத்துக்குரிய, கணவன் மனைவியர் பற்றிய.
Conoid
n. (வடி.) போலிக்கூம்புரு, கூம்பு வெட்டுத் தன் அச்சின்மேல் சுழல்வதனால் உண்டாகும் பிழம்புரு, ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள், (பெ.) கூம்பு வடிவமுள்ள.
Conquer
v. வலிமையினால் வெல், முயன்று வெற்றிகொள், வென்று அடை, கீழ்ப்படுத்து, வெற்றி வீரனாகு.
Conqueress
n. வெற்றிகொண்ட பெண்.
Conqueror
n. வெல்பவர், வென்று கைக்கொண்டவர், வெற்றியாளர், பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Conquest
n. அடிப்படுத்தல், கீழ்ப்படுத்தல், வென்று நிலம் கொள்ளுதல், வென்ற நிலப்பகுதி, அன்பு வெற்றி, அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Conquistadoe
n. (ஸ்பா.) வெற்றி வீரன், (வர.) 16-ஆம் நுற்றாண்டில் மெக்ஸிகோவையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்.
Consanguine, consanguineous
a. குருதிக் கலப்புடைய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, உறவான, ஒரே மரபைச் சேர்ந்த.
Consanguinity
n. குருதி உறவு.
Conscience
n. உளச்சான்று, நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு, மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை, நெஞ்சங்கோடாமை.
Conscience-proof
a. மனச்சான்றுறுத்தலுக்குச் செவி சாய்க்காத.