English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Conk
-1 n. காளான் வகையினால் உண்டாகும் மரநோய் வகை, மரநோயினால் ஏற்படும் வெட்டுமரக்கோளாறு.
Conk
-2 v. (பே-வ.) கெட்டுப்போ, முறிந்து போ, இயந்திர வகையில் சீர்கேடுறு.
Conker
n. கயிற்றில் கோத்துப் பிள்ளைகள் விளையாட்டு வகையில் பயன்படுத்தப்படும் நத்தை ஓடு அல்லது மரக்கொட்டை வகை.
Conkers
n. pl. நத்தை ஓட்டினை அல்லது மரக்கொட்டை வகையைக் கயிற்றில் கட்டி அதை வீசி எதிரியின் கயிற்றை அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட பிள்ளைகள் விளையாட்டு.
Conky
a. மரவகையில் காளான்வகை நோயினால் பீடிக்கப்பட்ட.
Conn
n. கப்பலை நெறிப்படுத்துல், கப்பலை இயக்குபவர் நிலை, (வி.) கப்பலை வழிப்படுத்து, இயக்கு.
Connascent
a. ஒரே சமயத்தில் உண்டான, அதே வேளையில் உண்டுபண்ணப்பட்ட.
Connate
a. பிறப்புடனமைந்த, உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய, சமகால வாழ்வுடைய, (தாவ., வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Connation
n. (உயி.) இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Connatural
a. இயல்பாமைந்துள்ள, இணையொத்த இயல்புள்ள.
Connect
v. இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இசைவி, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு.
Connectable
a. இணைக்கப்படத்தக்க.
Connected
a. இணைக்கப்பட்ட, தொடர்பான, பொருத்தப்பட்ட, பிணைக்கப்புடைய, உறவுத் தொடர்புடைய, ஒருசீரான.
Connectedly
adv. பொருத்தமாக, வரன்முறையாக, முன்னுக்குப்பின் முரணின்றி.
Connecter
n. இணைப்பவர், இணைக்கும் பொருள்.
Connectible
a. இணைக்கப்படத்தக்க.
Connective
n. (இலக்.) இணைப்பிடைச் சொல், வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல், (பெ.) சேர்த்துக் கட்டுகிற, இணைக்கப் பயன்படுகிற, இணைக்கும் பாங்குள்ள.
Connexion
n. ஒன்று சேர்த்தல், இணைப்பு, இணைக்கப்பட்டுள்ள நிலை, ஒட்டுறவு, பொருத்தம், இடையிணைப்பு, ஒன்று சேர்க்கும் பகுதி, கூட்டிணைப்புக் குழு, நேச உறவுக்குழு, தொழில் தொடர்பு, வாடிக்கைக்காரர் தொகுதி, சமயக்குழு, உறவினர், குடும்ப உறவு, இனத்தொடர்பு, நெருங்கிய பழக்கம், இருபால் புணர்ச்சியுறவு, சந்திப்பு வாய்ப்பு, ஊர்தி இருப்பூர்தி வண்டிமாற்று வாய்ப்பு.
Conning
n. வலவனுக்கு வழிகாட்டுதல், (பெ.) வழிகாட்டுகிற.
Conning-tower
n. போர்க்கப்பலின் வலவன் அறை, நீர் மூழ்கிக் கப்பலின் இயக்குநர் மனை.