English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Consensus
n. பல்வேறுபாகங்களின் பொருத்தம், (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு, கருத்து ஒருமைப்பாடு, முழு ஒற்றுமை, இசைவு.
Consent
n. உடன்பாடு, இசைவு, இணக்கம், இணக்கமளிப்பு, ஒப்புதல், (வி.) உடன்படு, இணங்கு, ஒப்புதலளி, சரியென்று சொல்.,
Consentaneous
a. இணங்கிய, இசைவான, ஒத்தபடியான, பொருத்தமான, உகந்த, ஒருமனதான, ஒத்தியங்குகிற.
Consentience
n. உடன்பாடு, உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், அரைகுறையான உணர்வு நிலை.
Consentient
a. உடன்படுகிற, இணங்குகிற, ஒத்தியங்குகிற, ஒருங்கியல்கிற, அரைகுறையான உணர்வு நிலையிலுள்ள.
Consequence
n. விளைவு, பயன், காரணகாரியத் தொடர்பு, முக்கியத்துவம், சமுதாய மதிப்பு, சமுதாயச் செல்வாக்கு, விளைவாக உண்டான செயல்.
Consequent
n. விளைவு, காரணத்தின் இயல்பான பயன், (பெ.) செயல்விளைவான, பயனாக ஏற்பட்ட, (நில.) தொடக்கத்தில் இருந்த நிலச்சாய்வுப் போக்கின்படி செல்கிற.
Consequential
a. விளைவாகப் பின்தொடர்கின்ற, தற்பெருமையுள்ள.
Conservancy
n. பேணுகை, ஆறு-காடு-தெரு-உடல்நலம் முதலிய வற்றின் பாதுகாப்பு, பாதுகாப்புக்குழு, பாதுகாப்புத்துறை, பாதுகாப்புச் செயல்.
Conservative
a. பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய, மாறுதல் விரும்பாத, நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட.
Conservative
n. பழமை பேணும் கட்சியினர், பழமைப்பற்றாளர், மாறுதல் விரும்பாதவர்.
Conservator
n. பாதுகாப்பவர், காவலாளர், காப்பாளர்.
Conservatorium
n. இசைப்பள்ளி.
Conservatory
n. களஞ்சியம், கிடங்கு, அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, இசைப்பள்ளி, (பெ.) பாதுகாக்கிற.
Conserve
n. பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள், (வி.) பழுதுபடாமல் பேணு, முழுதும் வைத்திரு, விடாமல் கொள், பாதுகாத்து வை, சேமித்து வை, தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
Consevation
n. பாதுகாப்புச் செயல், பேணுகை, முழுதும் பாதுகாத்தல்.
Consevatism
n. பழம் பண்புப் பாதுகாப்புக் கொள்கை, புதுமை வெறுப்பு.
Consevatoire
n. (பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Consider
v. கவனமாகப் பார், ஆழ்ந்து ஆராய், எண்ணிப்பார், சிந்தி, அமைந்து எண்ணு, கவனி, பரிசு கொடு.
Considerable
a. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல.