English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Considerate
a. எண்ணிப்பார்க்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கவனமான, மதியுள்ள.
Considerateness
n. பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை.
Consideration
n. ஆராய்வு, சலுகை, முக்கியத்துவம், சிறப்பு, நோக்கம் அல்லது காரணம், நட்டஈடு, இழப்பீடு, பரிசு, ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை, (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
Considering
prep. பார்க்குமிடத்து, நோக்குகையில், கவனித்தால்.
Consign
v. கையெழுத்து அல்லது முத்திரை இடு, ஒருமுகப்படுத்து, மாறுபாடு செய், இடமாற்று, உரிமை மாற்று, நம்பகமாக ஒப்படை, கடத்து, அனுப்பு.
Consignation
n. சட்டப்படி அமர்த்தப்பட்டவரிடம் ஒழுங்கு முறையின்படி பணம் கொடுத்தல், சரக்கை ஒப்படைக்கும் செயல்.
Consigned
a. நம்பகமாக ஒப்படைக்கப்பட்ட.
Consignee
n. சரக்கை ஏற்றுக்கொள்பவர், பொருள் ஒப்படைக்கப்பட்டவர்.
Consignment
n. ஒப்படைப்புச் செயல், ஒப்படைப் பொருள், ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி, அனுப்புச் சரக்கு.
Consilient
a. ஒத்துக்கொள்கிற.
Consist
v. கூறாகக் கொண்டிரு, இரு, உளதாகு, அமைந்திரு, உடனமைந்திரு, ஒருங்கிரு, ஒப்புக்கொள், இணைந்திரு.
Consistence
n. நெருக்க அளவு, பதார்த்தம்.
Consistency
n. நெருக்க அளவு, உடன்பாடு, நிலையாயிருத்தல், கொள்கை மாறாமை.
Consistent
a. கொள்கை மாறாத, நிலைபேறுள்ள, ஒத்திருக்கிற, முரண்பாடற்ற, கொள்கைப்பற்றுள்ள.
Consistory
n. பேரவை கூடும் இடம், பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு, மன்றம் அல்லது குழு, திருக்கோயில் முறை மன்றம்.
Consociate
n. கூட்டாளி, (பெ.) கூட்டாளியான, (வி.) கூட்டாகச் சேர்.
Consolation
n. ஆறுதல், துயராற்றுதல், ஆறுதலளிக்கும் நிகழ்ச்சி.
Consolatory
a. ஆறுதலளிக்கிற.
Console
-1 v. தேற்று, துயராற்று, ஆறுதலளி, பெருந்துயர் நீக்கி மகிழ்வி.
Console
-2 n. (கட்.) மூலைதாங்கும் தள நேரிணை, நெஞ்சளவுச் சிலை-மலர்க்குவளை-சிற்பஉருவம் முதலிய வற்றைத் தாங்கும் மூல இணைப்பு, இசைப்பெட்டித் திருகச் சாய்வு மேடை, பெரிய வானொலிப்பெட்டி.