English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Convertor
n. மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறி, மின்மறி.
Convex
n. குவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வௌத வளைவான, புறங்கவிந்த.
Convexed
a. புறங்குவிவாக்கப்பட்ட, புறங்கவியும்படி செய்யப்பட்ட.
Convexity
n. புறங்குவிவு, புற உருட்சி, கவிந்த பகுதி, கவிந்த உருவம்.
Convexo-concave
a. ஒருபுறம் புறங்குவிந்தும் மறுபுறம் உட்கவிந்துமுள்ள.
Convexo-convex
a. இருபுறமும் புறங்குவிந்துள்ள.
Convey
v. ஏற்றிச்செல், கொண்டு செல், செய்தியை அனுப்பு, கொண்டு சென்று தெரிவி, அறிவி, சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு, சுட்டித்தெரிவி, வழங்கு, அளி, சட்டப்படி, ஒப்படை, திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
Conveyance
n. கொண்டு செல்லுதல், அனுப்புதல், கொண்டு செல்லும் கருவி, பொருள் சுட்டுதல், கருத்துக் குறிப்பீடு, செல்கலம், வண்டி, ஊர்தி, (சட்.) உடைமை மாற்றம், உரிமை மாற்றுப் பத்திரம், தந்திரம், மோசடி.
Conveyancer
n. உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்கும் வழக்கறிஞர்.
Conveyancing
n. உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்குதல்.
Conveyer, conveyor
கொண்டு செல்பவர், கொண்டு செல்வது, வழங்குபவர், வழங்குவது, பொருள் சுட்டுபவர், பொருள் சுட்டுவது, தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டுசெல்லும் கருவி.
Convict
n. கடு ஊழியத் தண்டனையை மேற்கொண்டுள்ள குற்றவாளி, தண்டக் கைதி.
Convict
v. குற்றவாளியெனத் தீர்ப்பளி, குற்றமெய்ப்பி, குற்றமென்று ஏற்கச் செய், குற்றத்தை உள்ளத்தில் உறைப்பி.
Conviction
n. குற்றத்தீர்ப்பு, குற்றவாளியென முடிவு செய்தல், குற்ற எண்பிப்பு, குற்றவாளியெனத் தௌதவுபடுத்துதல், மெய்ப்பிப்பு, மெய்ம்மை காணும்படி செய்தல், உள்ளத்தின் உறைப்பு, மெய்ம்மையில் பற்றுறுதி, பற்றுக்கோள்.
Convictism
n. குற்றத்தண்டனை முறைமை.
Convictive
a. மெய்ப்பிக்கும் ஆற்றலுடைய, குற்றவாளியெனத் தண்டிக்கும் திறனுடைய.
Convince
v. நம்பவை, பற்றுறுதியூட்டு, மெய்ப்பித்துக் காட்டு, சான்றுமூலம் மனமேற்கும்படி செய், பொய்ம்மை மெய்ம்மை உறைப்பி, தன் குற்றம் தானே ஏற்கச் செய்.
Convincible
a. தவறு கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பிறர் கருத்தேற்க மறுக்காத, திறந்த மனமுடைய.
Convincing
a. நம்பத்தக்க, நம்பவைக்கிற, உறுதிப்பாடான.
Convivial
a. விருந்தைச் சார்ந்த, விருந்துக்குத் தக்கதான, கூட்டமாக விருந்துண்கிற, மது அருந்துகிற, கூடி மகிழ்கிற, மகிழ்ச்சியான.