English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Converging
a. ஒரு புள்ளியில் இணைகிற, சந்திக்கிற, நெருங்கி அணுகுகிற, (தாவ.) படிப்படியாக அணுகும் முனைகளையுடைய.
Conversable
a. உரையாடும் விருப்புடைய, கலந்து பேசும் இயல்புடைய, பழகும் தன்மையுள்ள, இனிது அளவளாவுகிற.
Conversance, conversancy
n. பழக்கப்பட்ட நிலை, நன்கறியப்பட்ட தன்மை, நடப்புணர்வு, அறிமுக நிலை, பழக்கம்.
Conversant
a. பரவலாக அறிந்துள்ள, கற்றுணர்ந்த, படித்துத் தெரிந்துகொண்ட, பழகியறிந்த, நன்கு பழக்கப்பட்ட, அறிமுகமான, ஈடுபாடுள்ள, அக்கறை கொண்ட.
Conversation
n. உரையாடல், பேச்சு, பழக்கம், பாலுறவு, முயக்கம்.
Conversational
a. உரையாடல் சார்ந்த, பேச்சு வழக்குக்குரிய, உரையாடல் வல்ல, உரையாட்டு அவாவுடைய.
Conversationalist
n. உரையாடல் வல்லுநர்.
Conversationism
n. பேச்சு வழக்குத்தன்மை.
Conversative
a. பேசும் செயல் விரைவுள்ள.
Conversazione
n. உரையாட்டவைக் குழாம்.
Converse
n. தோழமைத் தொடர்பு, உரையாடல்.
Converse
v. கலந்துபேசு, உரையாடு, கூடியுறவாடு, ஒருங்கு பழகு.
Converse
-3 n. மறுதலை, தலைமாறிய ஒன்று, (கண.) முடிவு தரவாகத் தரவு முடிவாக மாறிய விதி, (அள.) மறிவாக்கம், சொல் தலைமாறிய கருவாசகம், (பெ.) எதிர்நிலையான, நேர்மாறான, தலைமாறிய, வரிசை திருப்பப்பட்ட.
Conversion
n. தலைமாற்றுதல், தலைமறிவு, நிலைமாற்றம், கருத்துமாற்றம், கொள்கை மாறுபாடு, சமயமாற்றம், பயன்மாறுபாடு, உருத்திரிபு, பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல், (அள.) கருவாகச் சினை மாறுபாடு, தலைமறிப்பு.
Convert
n. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர்.
Convert
v. திரிபுறுத்து, நிலைமாற்று, உருமாற்று, கொள்கை மாற்று, சமயமாற்று, கட்சி மாற்று, மாற்றிக் கொள்ளும்படி செய், பொருளைத் திரிபுறுத்தி வேறொன்றுக்கு, இரும்பை உருக்காக்கு, பொருள்முறி வகைகளை இனமாற்று, பணமுறியைக் காசாக்கு, பண்புமாறுபடுவி, பயன் வேறுபடுத்து, தனிப்பயனுக்கு ஈடுபடுத்து, (அள.) தலைமறி வாசகமாக்கு.
Convertend
n. மாற்றியமைக்க வேண்டிய வாசகம்.
Converter
n. மாற்றியமைப்பவர், சமயமாற்றுபவர், மாற்றியமைப்பது, இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம், திரிகலம், மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி, மின் மறி.
Convertible
a. மாற்றிக்கொள்ளக்கூடிய, சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட, நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வௌளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள, வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
Convertite
n. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர், சீர்திருந்திய பெண்பாலர்.