English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Control
n. கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஆற்றல், ஆட்சியாற்றல், கட்டுப்பாட்டு ஒழுங்கு, விதி, ஆட்சி அதிகாரம், தலைமையுரிமை, தடுப்பாற்றல், தடுத்து நிறுத்தும் திறம், தடுத்தியக்கும் ஆற்றல், தடுக்கும் பொருள், தடைப்பண்பு, கட்டுப்படுத்தும் கருவி, சோதனைக்கருவி, கட்டுப்பாட்டு நிலையம், சோதனை நிலையம், கட்டுப்படுத்தும் செயல், செய்முறைக்கட்டுப்பாடு, கட்டளைச சட்டம், ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு, போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி, போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம், விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம், ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி, வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல், (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த, (வி.) சட்டுப்படுத்து, தடுத்து நிறுத்து, தடுத்தாள், இயக்கு, செயலாட்சி செய், அடக்கி ஆள், ஆதிக்கம் செலுத்து.
Controllable
a. கட்டுப்படுத்தக்கூடிய, தடை செய்து நிறுத்தத்தக்க, அடக்கத்தக்க.
Controlment
n. கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் செயல், கட்டுப்பாட்டுரிமை, கட்டுப்படுத்தப்படும் நிலை.
Control-tower
n. வானுர்தி ஏற்ற இறக்கப் பயிற்சி அளிப்பிற்குரிய வானுர்தி நிலையக் கட்டிடம்.
Controversial
a. வாத எதிர்வாதத்துக்குரிய, கருத்து மாறுபாட்டுக்குரிய, வாதத்துக்கிடமான.
Controversialist
n. வாத எதிர்வாதக்காரர், கருத்து மாறுபாட்டாளர்.
Controversy
n. வாத எதிர்வாதம், சொற்போராட்டம், கருத்து மாறுபாடு.
Controvert
v. எதிர்த்து வாதிடு, மறுத்துரை, கருத்து வேறுபாடு தெரிவி.
Contumacious
a. சட்டப்படியமைந்த அதிகாரியைப் பழிக்கிற, பிடி முரண்டான, விடாப்பிடியான.
Contumacy
n. கீழ்ப்படியாமை, பிடி முரணான எதிர்ப்பு.
Contumelious,a.
ஆணவம் மிகுந்த, அவமதிப்பான.
Contumely
n. ஆணவமிக்க நடத்தை, தான்தோன்றித் தனமான பேச்சு, அவமதிப்பு.
Contusion
n. அடிபட்ட காயம்.
Contusive
a. கன்னத்தக்க, புண்ணகத்தக்க.
Conundrum
n. விடுகதை, நொடி, புதிர்.
Conurbation
n. நகரங்களின் தொகுதி.
Convalesce
v. மீண்டும் உடல்நலம் பெறு, நோய் நீங்கி உடல் தேறுதல் அடை.
Convalescence, convalescency
n. உடல்நல மீட்டாக்கம், நோய் நீங்கியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறு நிலை.
Convalescent
n. நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர், (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற, நோய் நீங்கி நலம் பெறுகின்ற.