English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Contractor
n. உடன்படிக்கையாளர், ஒப்பந்தக்காரர், குத்தகையாளர், குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர், சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
Contractor
ஒப்பந்தகர், ஒப்பந்தக்காரர்
Contractual
a. ஒப்பந்தத்தைச் சார்ந்த, ஒப்பந்த இயல்புடைய.
Contradict
v. மறுதலி, மறுத்துப்பேசு, எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து, குணத்தில் மாறுபாடாயிரு, நேர் மாறாயிரு, முரண்படு.
Contradiction
n. மறுத்தல், முழுநிலை மறுப்பு, எதிர்ப்பாகப் பேசுதல், நேர் மாறுபாடு, முழு எதிர்மறை, எதிர் முரண்பாடு, ஒவ்வாத்தன்மை.
Contradictious
a. மறுக்கும் இயல்புடைய.
Contradictory
a. நேர்மாறான, பொதுநிலை எதிர்மறையான, உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற, எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற, முரண்பாடான, ஒவ்வாத, மறுக்கும்.இயல்புடைய.
Contradistinction
n. வேறுபடுத்திக்காட்டும் தனிச்சிறப்பு, மாறுபட்ட தனிப்பண்பு.
Contradistinctive
a. நேர் எதிர்ப் பண்புகள் மூலம் தனித்தறியக்கூடிய.
Contradistinguish
v. மாறுபாட்டால் உணர், வேறுபாட்டின்மூலம் பிரித்தறி.
Contralto
n. பெண்களின் குறைந்த இசை ஒலி, பெண்மைத் தாழ் இசைப்பொலியாளர், பெண்மைத் தாழ் இசைக்குரிய பாடற்பகுதி, (பெ.) பெண்மைத் தாழ் இசைப் பொலிவுடைய.
Contraposition
n. நேர்மாறானநிலை, எதிர்மறைநிலை, (அள.) எதிர்மறுப்பு, தருவாசகத்தின் உருமாற்ற வகை, பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
Contraprop
n. அச்சில் எதிர்ப்புறமாகச சுழலும் வானுர்தி விசிறி.
Contraption
n. (பே-வ.) போலித்தனமான சமாளிப்புக் கருவி, விசித்திரக் கட்டமைப்புடைய பொறி.
Contrapuntal
a. (இசை.) சுர இணைப்புச் சார்ந்த.
Contrapuntist
n. சுர இணைப்பு வல்லுநர்.
Contrariant
a. எதிரிடையான.
Contrariety
n. எதிர்மாறியல்பு, முரண்பாடு, இசையாமை, ஒவ்வாமை, செயல்முரண், பண்பு முரண், ஏறுமாறான குணம்.
Contrarious
a. முரண்பாடு காட்டுகின்ற, வெறுப்பைத் தருகின்ற, எதிரான, முற்றிலும் மாறான.
Contrariwise
adv. முற்றிலும் மாறான வழியில், எதிர்புறத்தில், நேர்மாறாக.