English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Contorniate
n. சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம், சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம், (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
Contort
v. வல்லந்தமாக முறுக்கு, திருகு, உருத்திரிபுறுத்து, நோயினால் நௌதந்து திருகலுறு.
Contorted
a. முறுக்கப்பட்ட, திருகிய, வளைந்து நௌதந்த, கோணல்மாணலான, (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற, (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Contortion
n. திருக்கு முறுக்கு, உருத்திரிபு, அருவருப்பான உருமாற்றம்.
Contortionist
n. உடலை அருவருப்பாகத் திருக்கி வளைக்கும் உடற்பயிற்சியாளர், சொற்களை வலிந்து திரிந்து வழங்குபவர்.
Contour
n. உருவரை, வடிவ விளிம்புவரை, பொதுத்தோற்றம், முனைத்த மேலீடான பண்பு, உருவரை சார்ந்த கலைப்பண்பு, மேடு பள்ள எல்லைக்கோடு, உயர்வு தாழ்வு எல்லைக்கோடு, நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி, (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு, மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
Contra
n. எதிர்வாதம், எதிர்ப்புறம், கணக்கின் வரவுப்பக்கம்.
Contraband
n. சட்டமீறிய வாணிகம், கள்ளச்சரக்கு இறக்குமதி, தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு, அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை, (பெ.) சட்ட மீறிய, தடை செய்யப்பட்ட, கள்ளவாணிகம் சார்ந்த.
Contrabandist
n. கள்ள வாணிகம் செய்பவர், கள்ளச் சரக்கு இறக்குமதி செய்பவர்.
Contrabass, contrabasso
n. இருமட்ட ஒலி உடைய இசைக்கருவி, (பெ.) இருமட்ட ஒலியுடைய இசைக்கருவியைச் சார்ந்த.
Contraception
n. கருத்தடை.
Contraceptive
n. கருத்தடைக்கருவி, (பெ.) கருத்தடை சார்ந்த, கருத்தடைக்குப் பயன்படுகிற.
Contract
n. உடன்படிக்கை, பொதுக்கட்டுப்பாட்டு வரையறையுடைய ஒப்பந்தம், குத்தகை, தொழில் ஒப்பந்தக் கட்டுபாடு, மொழியுறுதிக் கட்டுபாடு, மண உறுதி, மணம் செய்துகொள்ளுவதற்குரிய ஒப்பந்தம், ஒப்பந்தப் பத்திரம், பருவப் பயணச்சீட்டு, சீட்டாட்ட வகை, சீட்டாட்ட வகையில் இறுதிக் கேள்வி, செய்ய மேற்கொண்ட காரியம்.
Contract
v. உடன்படிக்கை செய், தொழில் ஒப்பந்தம் செய், குத்தகைக் கட்டுப்பாடு மேற்கொள், மணவுறுதி செய், உடன்படிக்கைமூலம் நிறைவேற்று, உறுதிமொழி கூறு, முயன்று பெறு, நட்பு முதலியன மேற்கொள், பிணி-கடன் எய்தப்பெறு, பற்றி இழு, சுருக்கு, சுருங்கு, சொல் குறுக்கமுறு, சொற்பகுதி சிதைந்து சொல் குறுகு.
Contractable
a. நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய.
Contracted
a. ஒன்றாகச் சேர்க்கப்பட்ட, குறுக்கப்பட்ட, ஒடுங்கிய, இடுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, கஞ்சத்தனமான, மணஉறுதி செய்யப்பட்ட.
Contractible
a. ஒப்பந்த உறுதி செய்யக்கூடிய, பற்றிக் கொள்ளக்கூடிய.
Contractile
a. சுருங்கக்கூடிய, சுருக்கும் ஆற்றலுள்ள, சுருக்கத்தை உண்டாக்குகிற.
Contraction
n. சுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.
Contractive
a. குறுகலாக்கும் இயல்புடைய.