English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Contrary
n. தொலை எதிர்நிலை, முனைப்பான நேர் எதிர் மறை, (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம், (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான, முரண்பாடான, வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற, (வி.) எதிர்த்துநில், மறுத்துப்பேசு, தொந்தரவு செய்.
Contrast
n. ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு, மாறுபட்ட தன்மை, வேறுபடும் பண்பு, மாறுபடும்பொருள், வேறுபாட்டு முனைப்பு, வேறுபாடுகளின் காட்சி, மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.
Contrast
v. மாறுபடு, வேறுபடு, வேறுபடுத்திக்காட்டு, வேறுபட அமை.
Contrasty
a. முனைப்பான வேறுபாடுகளைக் காட்டுகின்ற.
Contrate
a. சக்கரத்தில் தளத்துக்குச் செங்குத்தான பற்களுள்ள, அச்சுடன் இணைவான பல்லமைவுகளுடைய.
Contravallation
n. முற்றுகை செய்யப்பட்ட இடத்தைச்சுற்றி முற்றுகையாளர்கள் கட்டும் தற்காலிக அரண்வரிசைகள்.
Contravene
v. ஒப்பந்தத்தை மீறி நட, சட்டத்துக்கு எதிராகச் செயலாற்று, முரண்படு.
Contravention
n. மீறுகை, எதிரிடைய நடப்பு.
Contretemps
n. (பிர.) அவகேடு, எதிர்பாரா இடையூறு, இடக்கு, சிக்கல், மலைப்பு.
Contribute
v. கொடு, பங்காகக்கொடு, பொதுப்பணிக்கு உதவு, பொதுநிதிக்கு வழங்கு, பத்திரிகைக்குக் கட்டுரை முதலியன அளி, முயற்சியில் பங்குகொண்டுதவு, உடனுதவியளி.
Contribution
n. பங்களிப்பு, பொதுநிதிக்குப் பங்களித்து உதவுதல், துணைப்பணி, துணையுதவி, முயற்சியில் பங்கு கொண்டுதவுதல், பங்கு கொண்டுதவுதல், பங்குவரி, பங்குக் கட்டணமாகப் பிரிக்கப்படுவது, வழங்கிய பங்கு, அளித்த உதவி, கடப்பாடு, பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குதல், பத்திரிக்கைக்கு வழங்கிய மாற்றம், படைத்துறைப் பங்குக் கட்டணம்.
Contributor
n. நன்கொடைப் பங்காளர், பங்கு முயற்சியாளர், துணையுதவியாளர், பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குபவர்.
Contributory
n. கூட்டுக்கழக முறிவின்போது கடன் தீர்ப்புப் பொறியில் பங்குக் கடப்பாட்டாளர், (பெ.) பங்களித்துதவுகிற, துணையுதவி செய்கிற.
Contrite
a. பழியுணர்ந்து மனமழுந்துகிற, பாவத்தை எண்ணி உளநைவுறுகிற, தன்னுறத்தலுடைய.
Contrition
n. தன்மறுக்கம், செய்ததற்கிரங்கி உளைதல்.
Contrivable
a. முனைந்து திட்டமிடக்கூடிய, புனைந்து உண்டுபண்ணத்தக்க, சூழ்ச்சியால் முற்றுவிக்கத்தக்க.
Contrivance
n. திட்டமிடல், கண்டுபிடித்தல், செயற்படுத்துதல், கண்டுபிடிக்கப்பட்ட பொருள், கண்டுபிடிப்பு, பொறி அமைவு, சூழ்ச்சி, வஞ்சகம், உள் எண்ணம், தந்திரம்.
Contrive
v. திட்டமிடு, முயன்று கண்டுபிடி, புனைந்து தோற்றுவி, முனைந்து செயற்படுத்து, வெற்றியாகச் செய்து முடி, சதிசெய், சூழ்ச்சிசெய்.
Contriver
n. சூழ்ச்சியாளர், திட்டமிடுபவர், செயலாட்சியாளர்.
Contrller
n. கணக்குத் தணிக்கையாளர், செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி, அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர், செயல் ஒழுங்குபடுத்துபவர், சமநிலைப் பொறி, காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.