English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Convection
n. உகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
Convector
n. உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி, வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி.
Convenance, convenances
n. (பிர.) தகைமை, மரபு வழக்குத் தகுதி, சமுதாய ஆசாரம்.
Convene
v. ஒன்றுசேர், கூட்டு, அவைகூட்ட அழைப்புவிடு, அழை, கூடு.
Convenent
a. தக்க, தகுதியான, பொருத்தமான, எளிமை இசைவான, ஏற்ற, வசதியான, கைவாக்கான, கைப்பழக்கமுள்ள.
Convener
n. அவைகூட்டுநர், குழுத்தலைவர்.
Convenience
n. தகை நலம், சூழலிசைவு, வாய்ப்பு, இடவசதி, வேளை இசைவு, இன்னலம், வாய்ப்பு நலம், அலம்புமனை, கழிப்பிடம்.
Conveniences
n. pl. வாழ்க்கை நலங்கள், வாய்ப்பு நலங்கள்.
Convent
n. கன்னிமாடம், பெண் துறவியர் மல்ம்.
Conventicle
n. சட்டமீறிய மறைவொதுக்கமான சமயக்குழு, அரசியல் ஒவ்வாத புறச்சமயக் குழு, புறச்சமயக் குழுக்கூடும் இடம், (வி.) புறச்சமயக் குழுக்கூட்டம் கூட்டு.
Convention
n. அவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
Conventional
a. மரபொழுங்கு சார்ந்த, வழுக்காற்றுத் தொடர்புள்ள, புலனெறி வழக்கார்ந்த, மரபொழுங்கின் வயப்பட்ட, வழக்கமான, இயல்பற்ற, கட்டுபட்ட, செய்ற்கையான, பொது இணக்க ஒப்பந்தப் பயனான, குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத.
Conventionalism
n. நீளியல் மரபு முறைமை, புலனெறி வழக்கப்பண்பு.
Conventionalist
n. மரபொழுங்கைப் பின்பற்றுபவர், மரபொழுங்கில் இழைபவர்.
Conventionality
n. மரபொழுங்கு தழுவும் நிலைமை, நீடித்த பழமைக் கட்டு.
Conventionalize
v. மரபொழுங்குப்படுத்து, பொதுமரபின் பாற்படுத்து, இயற்பண்டக்கு, தற்பண்பற்றதாக்கு.
Conventual
n. கன்னிமாடப் பெண் துறவி, பிரான்சிஸ்கன் என்ற கத்தோலிக்க துறவு நிலையத்தின் தளர் விதிப்பிரிவைச் சார்ந்த உறுப்பினர், (பெ.) கத்தோலிக்கத் துறவி நிலையத்தின் தளர்விதிப் பிரிவைச் சார்ந்த.
Converge
v. குவி, வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு, மையத்தை நாடு, ஒருமுகப்படு, நெருங்கு, இணைவுறு, பண்பு ஒப்புமை கொண்டணுகு, குவியச்செய், கூடுவி, இணைவி.
Convergence
n. குவிவு, கூடுகை.
Convergent
a. குவிகிற, ஒருங்கு கூடுகிற, நெருங்குகிற, குவிவு காரணமான, குவிதலியல்புடைய.