English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cornflag
n. கத்தி வடிவமைந்த இலைகளையுடைய செடிவகை.
Corn-flour
n. கூலமாவு, மக்காச்சோள மாவு.
Cornflower
n. கூலப்பயிர்களையுடைய விளையும் அழகிய நீலமலர்களையுடைய களை வகை.
Corn-fly
n. கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை.
Cornhusker
n. கூல வகைகளின் உமி நீக்குபவர், கூல வகைகளின் உமி நீக்கும் இயந்திரம்.
Cornice
n. (க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம், எழுதகம், அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு, படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம், மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு, (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை, அச்சுருவ எழுதகம் அமை.
Cornice-hook
n. படமாட்டிக் கொளுவி, திரை மாட்டி.
Cornice-pole
n. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
Cornice-rail
n. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
Cornice-ring
n. பழங்காலப் பீரங்கியில் வாய் வளையத்தை அடுத்துப் பின்னுள்ள ஒப்பனை அச்சுரு வளையம்.
Cornicle
n. சிறு கொம்பு, கொம்பு போன்ற அமைப்பு, ஈ வகையின் மெழுகு சுரப்பிக்கும் குழல்களில் ஒன்று.
Corniculate
a. கொம்பு உள்ள, கொம்பு வடிவமைந்த.
Corniferous
a. (மண்.) எளிதில் நொறுங்கும் பாறை உண்டாக்குகிற, பாறை வகை அடங்கியுள்ள.
Corniform
a. கொம்பினையொத்த வடிவமைந்த.
Cornigerous
a. கொம்புடைய.
Corning-house
n. துப்பாக்கி மருந்து நுண்மணிகளாக வார்க்கப்படும் இடம்.
Cornist
n. துளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Cornland
n. கூல வகைகளைப் பயிர்செய்வதற்குத் தகுந்த நிலம்.
Corn-law, corn-laws
(வர.) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம்.
Cornloft
n. கூலக் களஞ்சியம், பத்தாயம்.