English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corresponding
a. ஒத்திசைவான, ஏற்புடைய, பொருந்துகிற, தகுதியாயிருக்கிற, கடிதத்தொடர்பு கொண்டிருக்கிற.
Corresponsive
a. ஒத்துள்ள, பொருந்துகிற, ஏற்புடைய.
Corridor
n. இரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம், புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி, ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம்.
Corridor-carriage
n. ஓர் அறை வளைவிலிருந்து மற்றோர் அறை வளைவுக்குச் செல்லும் வழியுள்ள வண்டி.
Corridor-train
n. ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை செல்ல குறுகலான இடைவழியுள்ள இருப்பூர்தித் தொடர்.
Corrie
n. மலைச்சரிவிலுள்ள மட்டமான பள்ளம்.
Corrigenda
n. pl. அச்சிட்ட புத்தகத்தில் பிழைதிருத்தங்கள்.
Corrigendum
n. திருத்தப்படவேண்டிய தவறு.
Corrigible
a. திருத்தப்படத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, திருத்தக்கூடிய, படினமானமுடைய.
Corrival
n. போட்டியிடுபவர், திராளி, ஒத்த தகுதியுடையவர், (பெ.) போட்டியிடுகிற, எதிராளியான, (வி.) போட்டியிடு, எதிர்த்து வெல்ல முயல், விஞ்ச முயற்சி செய்.
Corroborant
n. வலிமைதரும் மருந்து, உறுதிப்படுத்தும் செய்தி, (பெ.) வலிமை தருகிற, உறுதிப்படுத்துகிற.
Corroboration
n. உறுதிப்பாடு, நிலைபடுத்தல், கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல்.
Corroborative
n. வலியுறுத்தும் செய்தி, உறுதிப்படுத்தும் சான்று, (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
Corroboratory
a. வலியுறுத்தும் பாங்குடைய.
Corroboree
n. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை, ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம், (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
Corrode
v. கரம்பு, பையப் பைய அரித்துத்தின்னு, கரை, சிதை, அழிவுறு.
Corrodent
n. கரம்புவது, அரித்து அழிக்கும் பொருள், (பெ.) அரித்துச் சிதைக்கவல்ல.
Corronborate
a. வலியுறுத்தப்பட்ட, (வி.) முறைப்படி உறுதிப்படுத்து, நிலைநிறுத்து, சான்று காட்டி வலியுறுத்து.
Corrondentia
n. pl. புத்தகப்பேன் போன்ற சிறு பூச்சியினம்.
Corron-plant
n. பருத்திச்செடி, பஞ்சுதரும் செடியினத்தின் வகை.