English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cosaque
n. (பிர.) சீனவெடி, பட்டாசு.
Cose
v. வாய்ப்பமைதிகொள், வாக்காக அமர்ந்துகொள்.
Cosecant
n. (கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை, செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
Coseismal
n. நில நடுக்க உடனதிர்வு எல்லைக்கோடு, (பெ.) நிலநடுக்கத்தில் ஒரே சமயத்தில் உடனதிர்கிற.
Cosh
n. குண்டாந்தடி, செண்டு, (வி.) குண்டாந்தடியாலடி.
Cosher
-1 v. இடங்கொடுத்துக் கெடு, இளக்காரம் செய், செல்லம் கொஞ்சு.
Cosher
-2 a. தூய்மையான, மாசற்ற, யூதர்கள் சட்டத்தின்படி தூய்மையாக்கப்பட்ட.
Cosher
-3 v. சார்ந்தவர்களைப் பற்றிவாழ்.
Coshering, coshery
அயர்லாந்தின் நிலக்கிழார் தம் உரிமை ஏவலாளருடன் குடிவாரக்காரனிடம் தங்குவதற்குள்ள பண்டைய உரிமை.
Co-signatory
n. கூட்டொப்பக்காரர், பலருடன் கையெழுத்திடுபவர், (பெ.) பலருடன் சேர்ந்து கையெழுத்திடுகிற.
Co-significative
a. உட்னொத்த உட்குறிப்புடைய.
Cosine
n. (கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Coslettize
v. துருத்தடைக் காப்புமுறை கையாளு, மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய்.
Cosmetic
n. ஒப்பனைப்பொருள், சிங்காரப் பொருள், (பெ.) ஒப்பனைக்குரிய, முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய.
Cosmic
a. இயலுலகொடு சார்ந்த, இயலுலக அண்டத்துக்குரிய, சீர்பெற அமைந்த இயலமைவுக்குரிய, ஒழுங்கு முறையான.
Cosmical
a. இயலுலக அண்டத்துக்குரிய, (வான்.) கதிரவன் எழும்போது நிகழ்கிற, கதிரவனுடன் ஏழுகிற.
Cosmism
n. இயலுலக அண்டம் தானே தோன்றி நிலைபெற்றுள்ள முழுமைப் பொருள் என்னும் கோட்பாடு.
Cosmist
n. சமயச்சார்பற்ற கோட்பாட்டினர், உலோகாயதர்.
Cosmocrat
n. இயலுலகாள்பவர்.
Cosmogeny
n. இயலுலகத் தோற்றம்.