English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cosmogonic, cosmogonical
a. அண்டத் தோற்றம் சார்ந்த, இயலுலகப் படைப்புப்பற்றிய.
Cosmogonist
n. அண்டத்தோற்ற ஆய்வாளர், இயலுலகப் படைப்புக் குறித்து ஆழ்ந்து ஆராய்பவர்.
Cosmogony
n. அண்டப்பிறப்புக் கோட்பாடு, இயலுலகத் தோற்றம் பற்றிய கொள்கை.
Cosmography
n. இயலுலக விளக்க விரிவுரை, அண்ட அமைப்பியல்.
Cosmolatry
n. இயலுலக வழிபாட்டாளர், அண்ட வழிபாடு செய்பவர்.
Cosmolitics
n. உலக அரசியல்.
Cosmology
n. அண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு.
Cosmonaut
n. விண்வௌதச் செலவினர்.
Cosmoplastic
a. அண்டத்தை உருவாக்குகிற, உலகினை உருவாக்குகிற.
Cosmopolis
n. அகலுலகத் தொடர்பு கொண்ட நகரம்.
Cosmopolitan
n. அகலுவகக் குடிமகார், உலகப் பொதுப்பற்றாளர், பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர், (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான, தனிச்சார்பற்ற.
Cosmorama
n. பல்வண்ண உலகக் காட்சிக்கோவை, கண்ணாடி வில்லைகள்மூலம் இணைத்துக் காட்டப்படும் உலகளாவிய வண்ணக் காட்சித் தொகுதி.
Cosmos
n. இயலுலகு, அண்டம், ஒழுங்கமைதி வாய்ந்த முழுமைப்பொருள் உலகு, சீர்பெற்ற அமைந்த உலகம், ஒழுங்கமைதி.
Cosmosphere
n. நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு.
Cosmotheism
n. இயலுலகையும் இறைவனையும் ஒன்றுபடக் கொள்ளும் கோட்பாடு, அத்துவைதம்.
Cosmothetic, cosmothetical
a. புறவுலகு உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிற.
Cossack
n. தென்கிழக்கு ருசியாவிலுள்ள மக்கட் பிரிவினர், ருசிய விரை குதிரைப்படை வீரர்.
Cosset
n. அன்பாக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டி, செல்வமாக வளர்க்கப்படும் உயிரினம், (வி.) செல்லங்கொஞ்சு,. சீராட்டி வளர்.
Cost
-1 n. விலை, செலவு, செலவுத்தொகை, விலையாகக் கொடுக்கப்பட்ட பணம், (வி.) விலைபெறு, விலை பிடி, செலவாகு.
Cost(2), v. Cost
-1 என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம்.