English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Canonicals
n. pl. திருச்சபைக் கட்டளைப்படி அமைந்த அலுவல்முறை உடைகள்.
Canonicity
n. திருச்சபைச் சட்டத்தைச் சார்ந்த நிலை.
Canonist
n. திருச்சபைக் கட்டளை முறைகளில் தேர்ந்தவர், விதிமுறை அறிஞர்.
Canonistic
a. திருச்சபை விதிமுறை அறிஞருக்குரிய, கட்டளை முறைகளைச் சார்ந்த.
Canonization
n. புனிதர் தொகையுட்படுத்துதல், புனிதர் திருமுறையுட் சேர்த்தல், திருமுறை வகுப்பு, வழிமுறைப்படுத்துதல், விதிமுறைப்பாடு, திருச்சபை இசைவேற்பு.
Canonize
v. தூய்மையர் வரிசையிற் சேர்ர, திருமுறைப்படுத்து, கட்டளைப்படுத்து, விதிமுறையானதென்று ஒப்புதல் தெரிவி.
Canon-law
n. கிறித்தவ சமயச்சட்டம், திருச்சபைக் கட்டளைமுறைத் தொகுப்பு.
Canonry
n. கட்டடிளச் சமயக் குழுவினர் மானியம்.
Canophilist
n. நாயிடம் பற்றுச் செலுத்துபவர், நாய் ஆர்வலர்.
Canopic
a. குடற்றாழி சார்ந்த, பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Canopic
a. கனோபஸ் என்ற பண்டை எகிப்திய நகருக்குரிய.
Canopus
n. அப்த்திய நட்சத்திரம், அக்கினி நட்சத்திரத்துக்கு அடுத்தபடி ஔதமிக்க தென்திசை வானின் விண்மீன் குழுவிலுள்ள விண்மீன், குல்ற்றாழி, எகிப்தில் கெடாமல் பேணி வைக்கப்படும் பிணத்தின் உள் உறுப்புகளை வைக்கப் பயன்படும் மனிதத் தலையுடைய புதைகலம்.
Canopy
n. மேற்கட்டி, விதானம், மேற்கவிகை, உலகக் கவிகை மாடம், (க.க.) மாட மேற்கட்டு, உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம், விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஔதயூடுவும் மேற்கவிகை, வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி, (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு, விதானம் அமை.
Canorous
a. காதுக்கினிதாக இசைக்கிற, இசை அதிர்வுடைய.
Cansone
n. பல உறுப்புக்களைக் கொண்ட உணர்ச்சிப்பாடல் வகை, உணர்ச்சிப்பாடலுக்கேற்ற கருவியிசைப்பு, பல்சந்தமுடைய இத்தாலியப் பாடல் தொகுதி.
Canst, v. Can
என்பதன் பழைய முன்னிலை ஒருமை வடிவம்.
Cant
-1 n. செயற்கைப் பேச்சு, பகட்டுரை, பொருளற்ற மரபுரை, வெற்றுரை, கொச்சை, இழிசொல், தனிமொழி, குழுஉக்குறி வழக்கு, போலிக்கருத்து, சமயப்பகம்டு, பாசாங்கு, படிற்றெழுக்கம், கபட நடத்தை, (பெ.) பொய்யான, போலியான, பகட்டான, வெற்றாவாரமான, (வி.) வெற்றாரவாரம் செய், பொய் நடிப்
Cant
-2 n. தளச்சாய்வு, சரிவு, கப்பல் அகட்டிலிருந்து சாய்தளமான கட்டை, சாய்தளம், சரிவு முகப்பு, மிடாமூடியின் பக்கப் பலகை, திடீர் எறிவு, குலுக்கம், (வி.) சாய், மூலைவாக்கில் சரி, விளிம்பின் மீது திருப்பு, தூக்கி எறி.
Cant
-3 n. ஏல விற்பனை, (வி.) ஏலத்தின் மூலம் விற்பனைச்செய்.
Cant, v. Cannot
என்பதன் பேச்சு வழக்குச் சுருக்கம்.