English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cannon-bit
n. வட்ட வடிவாளக் கடிவாளச் சில்லு.
Cannon-bone
n. பாலுண்ணிகளின் உள்ளங்கால் எலும்பு பாத எலுட்புகளின் கெட்டிப்பு இணைப்பான எலும்பு.
Cannoneer
n. பீஜ்ங்கி வலவர்.
Cannon-fodder
n. பீரங்கி இரை, போரில் ஈடுபட்டு மாள்வதற்குரிய மனிதர் தொகுதி.
Cannon-game
n. மேடைக் கோற்பந்தாட்ட வகை.
Cannon-metal
n. பீரங்கி உலோகம், துப்பாக்கி செய்யப்பயன்படும் உலோகம், ஒன்பது பங்கு செம்பும் ஒரு பங்கு வௌளீயமும் கொண்ட வெண்கலக் கலவை.
Cannon-proof
a. பீரங்கிக்குண்டு ஏறாத, பீரங்கிக்குண்டுக் காப்பான.
Cannonry
n. பீரங்கித் தாக்குதல், பீரங்கித்தொகுதி.
Cannon-shot
n. பீரங்கிக் குண்டு, பீரங்கிக்குண்டு வீச்செல்லை.
Cannot
v. முடியாது, இயலாது.
Cannula
n. (மரு.) துளைக்கருவி உட்கொண்ட குழாய்க் கருவி, உயிர்ப்பு உதவும் குழாய்க் கருவி.
Cannulate
a. (மரு.) அறுவை உயிர்ப்புக் குழாயைச் சார்ந்த.
Canny
a. விறல் படைத்த, சாமர்த்தியமான, சூழல் புரிந்து கொள்கிற, உலகியல் திறமைவாய்ந்த, கூரிய அறிவுள்ள, நற்பேறான, நன்னிமித்தமுடைய, இடர்ப்பாடு நீங்கிய, நலமான, வசதியான, கடுஞ் சிக்கனமான, மென்னயமிக்க, சூழ்ச்சி நயமுடைய.
Canoe
n. வள்ளம், சிறுபடகு, துடுப்பு வட்டுக்கொண்டு உகைக்கப்படும் தோணி, (வி.) படகு வகை.
Canoeist
n. படகோட்டி, படகு உகைப்பவர்.
Canon
-1 n. கட்டளை, பொது ஒழுங்கு, சட்டம், விதி, சூத்திரம், கட்டளை ஏடு, கட்டளை மறை ஏடு, திருமுறை, திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு, ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு, மணியின் கொளுவி, ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி, முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு, புனிதர்
Canon
-2 n. கட்டளைக்கு உட்பட்டுக் கிறித்தவ மாவட்ட முதற்கோயிலிலோ வேறு திருக்கோயிலிலோ ஊழியம் செய்யும் சமயக் குருக்கள் குழுவின் உறுப்பினர், கிறித்தவ மாவட்டத் தலைமைக் கோயிலைச் சார்ந்து தனிச் சலுகை ஊழியம் பெறும் உயர்நிலைச் சமயக்குரு.
Canon
-3 n. அருவி பாய்ந்து உண்டான கெவி, மலைவிடர், ஆழ்கிடங்குப் பள்ளத்தாக்கு.
Canoness
n. விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர், கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Canonic, canonical
கட்டளை முறையான, விதிமுறை தழுவிய, ஒழுங்கு முறைப்பட்ட, திருச்சபை மரபு வழுவாத.