English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cane-brake
n. மூங்கிற் புதர்க்காடு, பிரப்பங்காடு.
Cane-chair
n. பிரம்பு நாற்காலி.
Cane-fruit
n. பிரப்பம்பழம், மூங்கிற்பழம்.
Canella
n. கருவாமரம், இலவங்க மரவகை.
Cane-mill
n. கரும்பு ஆலை.
Canephor
n. (கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
Canephorus
n. (ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம்.
Canescent
a. வெண்மையாக்கும் போக்குடைய, பழமையான.
Cane-sugar
n. கரும்புச் சர்க்கரை, கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Cane-trash
n. கரும்பாலை எரிபொருளாகப் பயன்படும் கரும்புச்சக்கை.
Cang, cangue
சீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.
Canicular
a. அக்கினி நட்சத்திரைச் சார்ந்த, கத்தரி நாளைச் சார்ந்த.
Canine
a. நாளைச் சார்ந்த, நாய் போன்ற, பல்வகையில் நாய்க்கிருப்பது போன்ற.
Caning
n. பிரம்படி, பிரம்பால் அடித்தல்.
Canister
n. தேயிலைப்பெட்டி, குண்டு ரவைப்பெட்டி, அப்பப்பெட்டி.
Canker
n. வாய்ப்புண், அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு, மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை, பழமர நோய்வகை, குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம், நாயின் காதில் வரும் படைநோய், பறவைகளுக்கு வரும் கட்டி, அரிக்கும்புழு, அழிகேடு, (வி.) உள்ளந்தரி, அரித்தழி, இழிவுக்கு ஆளாக்கு, பழியொட்டு, அழி, கேடுபரப்பு, பண்புகெடு, சீர்குலைவூட்டு, ஊழ்த்துப்போ, கெடு.
Cankered
a. அரிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சீர்குலைவுற்ற, பண்புகுலைவுற்ற, மனக்கசப்புற்ற.