English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crept, v. creep
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Crepuscle
n. மாலை அரை இருள், அந்தி அரை ஔத.
Crepuscular, crepusculous
a. அந்தி அரை ஔத சார்ந்த, மங்கலான, விட்டுவிட்டு ஔதர்கிற, முழுவிளக்கமற்ற, முழு அறிவொளி பெறாத, (வில.) அந்திமாலையில் தோன்றுகிற, அந்தி ஔதயில் விரைவியக்கமுடைய.
Crescendo
n. (இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம், படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல், உச்ச நிலையை நோக்கிய போக்கு, (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற, (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு, (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன்.
Crescent
n. வளர்மதி, வளர்பிறை வடிவம், வளர்பிறை வடிவுடையது, துருக்கிய சுல்தானின் கொடி, துருக்கிய அரசர் சின்னம், துருக்கிய அரசு, இஸ்லாமிய சமயம், பிறைவடிவக் கட்டிட வரிசை, பிறைவடிவ அப்பம், (பெ.) வளர்கிற, பெருகுகிற, பிறைவடிவமுள்ள.
Crescentade
n. இஸ்லாமியரது சமயநெறிப்போர்.
Crescented, crescentic
a. பிறைபோல் அமைந்த, பிறை வடிவான.
Cress
n. உணவுக்குதவும் காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிவகை.
Cresset
n. இருப்புச்சட்டி, தீப்பந்தம், காட விளக்கு, சொக்கப்பானை உச்சி எரி கூடை, விளக்குக் கம்பத்துக்குரிய எண்ணெய்ச்சட்டி, துறைமுகத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஔதப்பந்தக் கூடை.
Cressy
a. காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிகள் நிறைந்த.
Crest
n. தலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
Crested
a. சூட்டு உடைய, முகடாக உடைய, உச்சியிற் கொண்ட, (தாவ.) தலைச்சூட்டுபோன்ற கிளர்ந்த அமைவு இணைக்கப்பட்டுள்ள.
Crest-fallen
a. கிளர்ச்சியிழந்த, சோர்வுள்ள, அவமதிப்படைந்த, தலைகுனிவு எய்தியுள்ள.
Crestless
a. சூட்டிழந்த, கொண்டை அற்ற, உயர்குடி உரிமையற்ற.
Cretaceous
a. சீமைச் சுண்ணாம்பினாலான, சீமைச் சுண்ணாம்பின் இயல்பு வாய்ந்த.
Cretaceous
n. (மண்.) சீமைச்சுண்ணாம்பு ஊழி, (பெ.) சீமைச் சுண்ணாம்பு ஊழிக்குரிய.
Cretic
n. பண்டைய கிரீட் நாட்டவர், (பெ.) கிரீட் நாட்டுக்குரிய.
Cretic, n.
-1 (இலக்.) இரண்டு நெடிற்சீர்களுக்கிடையில் ஒரு குறுஞ்சீர் கொண்ட வரி.
Cretify
v. சீமைச் சுண்ண உப்புச்செறியவை, சீமைச் சுண்ணமாக மாற்று.
Cretin
n. ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர், கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.