English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cremator
n. பிணம் சுடுபவர், குப்பை கூளங்களை எரிப்பவர், பிணங்களை எரிக்கும் கருவி, குப்பை கூளங்களை எரிப்பதற்கான எரிபொறி.
Crematory
n. சுடுகாடு, (பெ.) பிணம் எரிப்பதற்குரிய.
Cremona
n. இத்தாலியிலுள்ள கிரிமோனாவில் செய்யப்படும் உயர்வகை நரப்பிசைக் கருவி, இசைக்கருவி ஆணியில் அழுத்து கட்டை.
Crena
n. சிறு வெட்டுவாய், பல்.
Crenate, crenated
(தாவ., வில.) பல் விளிம்பினையுடைய.
Crenature
n. வளைவான பல் விளிம்பினையுடைமை.
Crenel
n. (க-க.) நின்று எய்வதற்குரிய அரண்மதிலின் மேலுள்ள இடைவௌத, (வி.) இடைவௌதயிட்டு அமை.
Crenelate, crenellate
a. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்டமைக்கப்பட்ட, புழைவாய்கள் அமைந்த, (வி.) இடைவௌதகளிட்டு அரண்மதிலமை.
Crenellated
a. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்ட, புழை வாய்கள் அமைக்கப்பட்ட.
Crenulate, crenulated
a. வெட்டுவாய்களுள்ள, அரம் போன்ற நுண் பல் விளிம்புடைய.
Creole
n. மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகள் குடியேறிய ஐரோப்பியர் அல்லது நீகிரோவர் அல்லது அவர்தம் கால்வழியினர், அமெரிக்காவில் பிறந்த நீகிரோவர், (பெ.) மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள் அல்லது நீகிரோவின் கால்வழியினரான, விலங்குகள் முதலியன வற்றின் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய நாடுகளின் சூழலுடன் இணைக்குவிக்கப்பட்ட.
Creosote
n. கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி, வாணிகத்துறைக் கரியகக் காடி, (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Creosote-plant
n. கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை.
Crepe
n. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய துணி, (வி.) மயிர் போலச் சுருள்வி.
Crepe-soled
a. புதை மிதியடி வகையில் சுருக்கங்களுள்ள ரப்பர் தாள்களினாலான அடிப்பகுதியுள்ள.
Crepitate
v. படபடவென வெடி, வெடிப்போசை எழுப்பு, கடகடவென ஒலி, ஒடி, முறி, வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை.
Crepitation
n. படபடத்தல், நெறுநெறுத்தல், வெடிப்போசை, எழுப்புதல்,( மரு.) குறுகுறு ஒலி, உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Crepoline
n. சுருக்கங்களுள்ள இலேசான மெல்லிய பட்டுத் துணி போன்ற ஆடைப்பொருள்.
Crepon
n. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய உறுதிமிக்க துணி வகை.