English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Creasy
a. மடிப்புக்குறிகள் நிறைந்த.
Create
v. படை, உளதாக்கு, வெறும்பாழிலிருந்து தோற்றுவி, உருவாக்கு, இயற்று, புதிது ஆக்கு, கற்பனையால் தோற்றுவி, புதிது திட்டமிடு, புத்துரு அளி, புதுப்பண்பூட்டு, புதிய இயல்பு வழங்கு, பிறப்பி, மரபு உண்டுபண்ணு, முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Creatine
n. சதையின் சாற்றில் காணப்படும் உயிர்ப்பொருள் மூலக்கூறு, முதுகெலும்புள்ளவற்றுக்குரிய வரி நிலைத்தசையின் நிலையான தனிச்சிறப்புக் கூறு.
Creation
n. படைத்தல், ஆக்கல், உலகப்படைப்பு, படைப்புப்பொருள், படைப்புத் தொகுதி, படைக்கப்பட்ட உலகம், அண்டம், பட்டம்-பதவியளிப்பு, கற்பனைப் படைப்பாற்றல், தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல், தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Creationism
n. தனித்தனிப் படைப்புக் கொள்கை, ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை, உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Creative
a. படைக்கும் திறனுள்ள, புதிது ஆக்கும் ஆற்றலுடைய, படைக்கிற, தோற்றுவிக்கிற.
Creator
n. படைப்பவர், கடவுள், தோற்றுவிப்பவர், ஆக்குவோர்.
Creatural, creaturely
a. வாழும் உயிரினம் சார்ந்த, உயிரின வாழ்க்கைக்குரிய.
Creature
n. படைப்புயிர், உயிரினம், கைப்பாவை, கைப்படைப்பு, சார்பாளர், விரும்புபவரைக் குறிப்பிடும் சொல், வெறுப்பவரைக் குறிப்பிடும் சொல்.
Creche
n. குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம், குழந்தை வளர்ப்புப் பண்ணை.
Credence
n. நம்புதல், நம்பிக்கை, நம்புதல் பெறும் நிலை, திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை, திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வௌதச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
Credendum
n. நம்பவேண்டிய பொருள், சமயக்கடைப்பிடிக்குரிய செய்தி.
Credent
a. நம்பத்தகுந்த, எதையும் நம்புகிற, எளிதில் நம்பும் இயல்புடைய.
Credential
n. நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று, (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற.
Credentials
n. pl. அறிமுகச் சான்றுக் கடிதங்கள்.
Credible
a. நம்பிக்கைக்குரிய, நம்பத்தக்க.
Credit
n. நம்பிக்கை, தகுதிக்குரிய மதிப்பு, பாராட்டு, நன்மதிப்பு, நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு, நற்பெயர், புகழ், மேன்மை, சிறப்பளிப்பவர், சிறப்பளிப்பது, மேம்பாடு, தனிச்சிறப்பு, நன்னடத்தை, கடன் பொறுப்பில் விற்பனை, கடன் மதிப்பு, கடன் தவணைச்சலுகை, பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை, கணக்கேட்டின் வரவினப்பகுதி, சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை, பொறுப்பீட்டுத்தொகை, சலுகைக் கடன் மதிப்பெல்லை, அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு, (வி.) நம்பு, நம்பிக்கை கொள், சலுகையளி, கடன் தவணை கொடு, பணம் செலுத்தத் தவணை வழங்கு, கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய், மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை, மதித்து ஏற்றுக்கொள், நம்பி ஒப்புக்கொள்.
Creditable
a. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற.
Creditor
n. கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு.
Credo
n. சமயப்பற்றுக்குரிய கோட்பாடு, திருக்கோயில் வழிபாட்டில் அமைக்கப்பட்ட கோட்பாடு வாசக இசை அமைப்பு.