English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crash
-2 n. நார்த்துணி, கைக்குட்டைகளுக்கான சொரசொரப்பான துணி வகை.
Crash-dive
n. நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல், (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு.
Crash-helmet
n. விமானம்-உந்துவண்டி-மிதி உந்துவண்டி ஆகிய வற்றின் ஓட்டிகளுக்குரிய பஞ்சுறையிட்ட பாதுகாப்புத் தலைக்கவசம்.
Crash-land
v. வானுர்தி வகையில் திடீரெனப் பேரொலியுடன் நிலத்தில் வலிந்து இறங்கு.
Crasis
n. தாதுக் கலவை, உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை, உடல்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல்.
Crass
a. பருத்த, தடித்த, திண்ணிய, அடர்த்தியான, அறிவற்ற.
Crassamentum
n. உறை குருதியின் அடர்பகுதி, உறைந்த குருதிக் கட்டி.
Crassitude
n. திண்ணிய சடத்தன்மை, கரடுமுரடான தன்மை, நெருக்கம், அடர்த்தி, முட்டாள்தனம், மடமை.
Cratch
n. கால் நடைகளுக்குத் தீனி வைக்குமிடம், விலங்குகளுக்கு வௌதப்புறத்தில் தீனி வைக்கும் அடுக்கு வரிச்சட்டம்.
Cratches
n. pl. குதிரைகளின் கீழ்ப்புறப் பின்பகுதி வீக்கம்.
Crate
n. பிரப்பங்கூடை, கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம், சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி, (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Crater
n. இன்தேறல் கலவைக் கும்பா, கிண்ணம், எரிமலை வாய், எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி, மின் வளைவுக் கரியக் குழி.
Cravat
n. கழுத்துப்பட்டி, (வி.) கழுத்துப்பட்டியை அணி.
Crave
n. ஏக்கம், ஆர்வ விருப்பம், (வி.) ஆர்வத்துடன் இர, பிச்சையெடு, கெஞ்சிக் கேள், தேவைப்படு, அவாவு, மிக விரும்பு.
Craven
n. கோழை, ஊக்கமற்றவன், (பெ.) கோழையான, ஊக்கமற்ற.
Craver
கெஞ்சிக் கேட்பவர், இரப்பவர்.
Craving
n. வேணவா, அடக்க முடியாத ஆசை, மிகு விருப்பம், நீடித்த நாட்டம்.
Craw
n. கோழி-பறவைகளின் கழுத்துப் பை, பூச்சியினத்தின் கழுத்துப் பை, விலங்கினத்தின் இரைப்பை, விலங்கினத்தின் வயிறு.
Crawfish
n. நன்னீர் நண்டு வகை.
Crawl
-1 n. ஆழமற்ற நீர்நிலையில் அமைந்த மீன் வளர்ப்புப்பட்டி, கடலாமைக்குரிய நீர்நிலை வளர்ப்புப்பட்டி, தென் ஆப்பிரிக்காவில் வேலியடைப்பிட்ட சிற்றுர்க் குடிசைத் தொகுப்பு, ஆடுமாடுகளின் தொழுவம்.