English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cramp
-2 n. பற்றிணைப்பு, கட்டுமானங்களை இறுக்கிப் பிணைக்கும் பகர வளைவுடைய இரும்புக் கம்பி, பிணைப்புக்கருவி, இடத்துக்கிடம் பெயர்க்கவல்ல கட்டை இறுக்கிப்பிணிக்கும் கருவி, தடைநிலை, கட்டுப்பாடு நிலை, (வி.) பற்றிணைப்பால் இணை, தடைப்படுத்து, கட்டுப்படுத்தி வை, ஆற்றல் கட
Cramp
-3 a. கையெழுத்து வகையில் விளக்கமற்ற, புரியாத, குறுக்கப்பட்ட, இடுக்கமான, (வி.) இடுக்கப்படுத்து.
Cramp-bone
n. சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
Crampet
n. வாளுறையின் முனைத்தகடு, வாளுறையின் மாட்டுக்கொக்கி, பற்றிணைப்பு, பிணைப்பிரும்பு, கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி, பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Cramp-fish
n. மின்னெறி மீன்.
Cramp-iron
n. பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு.
Crampon
n. கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி, உலோகத்தாலான கொக்கி, பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை, மலையேறு மிதியடி, தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Cramp-ring
n. அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
Crampy
a. சுளுக்கு நோயால் பீடிக்கப்பட்ட, பிடிப்பு நோயை உண்டாக்கத்தக்க.
Cran
n. ஸ்காத்லாந்து நாட்டு வழக்கில் பிடித்த புது மீனுக்குரிய முகத்தலளவைக் கூறு (3ஹ்.5 காலன்கள்).
Cranage
n. பாரந்தூக்கியைக் கையாளுகை, பாரந்தூக்கிக் கையாட்சிக்குரிய கட்டணம்.
Cranberry
n. புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை, காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை.
Crane
-1 n. நாரை, பாரந்தூக்கிப்பொறி, மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய், காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய், (வி.) நாரை போல் கழுத்தை நீட்டு, நீளு, தலைநீட்டு, எட்டியடைய முனை, பாரந்தூக்கிமூலம் தூக்கு, பாரந்தூக்கி வழி இயங்க
Crane-fly
n. நீண்ட கால்களையுடைய ஈ வகை.
Cranes-bill
n. நாரை அலகுபோன்ற பழமுள்ள காட்டுச்செடி.
Cranial
a. மண்டையோட்டுக்குரிய, மூளைபொதிந்த குடுவைக்குரிய.
Craniognomy
n. மண்டையோடு சார்ந்த புற உடலமைப்புக் குறி நுல்.
Craniology
n. மண்டையோட்டாராய்ச்சி நுல், மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
Craniometer
n. மண்டையோட்டுமானி, மண்டை ஓட்டை அளக்கும் கருவி.
Cranioscopist
n. மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையாக நுலியலாக உருவாகக் கூடுமென்று கருதப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சியாளர்.