English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cranioscopy
n. மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
Craniotomy
n. இளஞ்சூலின் மண்டையோட்டைத் தகர்த்துக் கூறுபடுத்துதல்.
Cranium
n. மண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
Crank
-1 n. வளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்
Crank
-2 n. பேச்சுவிகடம், சொற்பொறி, செயற்கைச் சொற்புரட்டு, தாறுமாறான எண்ணம், புனைபோலிக் கருத்து, மனம்போன போக்கு, பொதுப்பண்பு மீறிய செயல், பித்துக் கொள்ளித்தனம், பித்துக்கொள்ளி, பொதுப்பண்பு மீறியவர், பற்று வெறியர்.
Crank
-3 a. இயந்திர வகையில் மெலிந்த, வலுவற்ற, ஆட்டங் கொடுக்கின்ற.
Crank
-4 a. (கப்.) தலைகீழாகக் கவிழக்கூடிய.
Crank
-5 a. சுறுசுறுப்பான, விரைவான, களிப்பான, மகிழ்ச்சி விளைவிக்கிற, (வினையடை) சுறுசுறுப்பாக, களிப்பாக.
Crankle
n. வளைவு, திருப்பம், சுரிப்பு, திருக்கு முறுக்கு, (வி.) உள்ளும் புறமுமாக வளை, திருகி முறுக்கு.
Cranky
a. வளைந்த, கோணலான, நொய்ய, உறுதியற்ற, வலுவற்ற, மனம்போன போக்கான, எண்ண ஒழுங்கற்ற, ஏடாகோடாமான.
Crannied
a. பிளவுகளுள்ள, கீறல்களுடைய, வெடிப்புக்களுள்ள.
Crannog
n. தீவரண், ஸ்காத்லாந்திலும் அயர்லாந்திலும் ஏரியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் அமையப்பெற்ற அரண்காப்புடைய தீவு, ஏரியகமனை.
Cranny
n. பிளவு, கீறல், மறைவிடம், (வி.) பிளவுகளுக்குள் செல்.
Crape
n. துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை, புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை, துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை, (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான, (வி.) மென்பட்டுத் துணி அணிவி, மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி, கரும்பட்டுத் துணியால் அணி செய், முடியைச் சுருளச் செய்.
Crape-cloth
n. மெல்லிழைக் கரும்பட்டுப் போன்ற கம்பளித் துகில்.
Craps
n. pl. பகடைக்காயைக் கொண்டு ஆடும் சூதாட்ட வகை.
Crapulence
n. அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய், மட்டுமீறிய குடி.
Crapulent, crapulous
மட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட, அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
Crarmesy, cramoisy
மிகு சிவப்பு நிறம், செக்கர் நிறத்துகில் (பெ.) மிகு சிவப்பான.
Crash
-1 n. தகர்வொலி, முறிவோசை, மோதல் ஒலி, இடி முழக்கம், திடீர் இசை எழுச்சி, மோதல் அதிர்ச்சி, திடீர்த் தகர்வு, முறிவு, வாணிக நிலைய நொடிப்பு, அழிவு, வீழ்ச்சி, வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு, (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ், விழுந்து நொறுங்கு, இடிமுழக்கமிடு, இடிமுழக்