English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crawl
-2 n. நகர்வு, தவழ்வு, ஊர்ந்து செல்லுதல், மெல்லசைவு, மென்னடை, நகர்வியக்கம், வீச்சு நீச்சு, முதல்தர விரை நீந்தல் முறை, முகங்கவிழ்ந்த நிலையில் உடல் நீர்ப்பரப்பில் மிதப்பக் கைகளை மாறி மாறி வட்டாகாரமாக வீசி உடல் சிறிது புரளும்படி துழாவி நீர் கிழித்துச் செல்லும
Crawler
n. ஊர்ந்து செல்பவர், ஊர்ந்து செல்வது, இழிமகன், தன் மதிப்பில்லாதவர், மந்தமானவர், மசணை, ஊரும்உயிரினம், வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை, குழந்தையின் படுக்கைக் கட்டு.
Crayon
n. வண்ணத் தீட்டுக்கோல், சாயச் சுண்ணக் காம்பு, வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம், மின் விளக்கில் கரிமுனை, (வி.) வண்ணக்கோலால் வரை, உருவரை கோலு, வரைத்திட்டமிடு.
Craze
n. வெடிப்பு, வெடிப்புத்தடம், வடு, மனமாறாட்டம், கோட்டி, பித்த மயக்கம், ஆர்வவெறி, மட்டுமீறிய வெறி ஆர்வம், மாறுபடும் பற்று மயக்கம், வேறுபடும் நாண் மரபு, (வி.) வெடிக்கச் செய், மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி, வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு, மனமாறாட்டம் செய், கிறுக்காக்கு.
Crazing-mill
n. தகரக் கனி உலோகக் கலவை நொறுக்கிப் பொடி செய்யும் ஆலை.
Crazy
a. வெடிப்புள்ள, பிளவாக்கப்பட்ட, கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற, கட்டிடவகையில் உறுதியற்ற, நலிவுற்ற, நோய்ப்பட்ட, பித்துப்பிடித்த, கிறுக்கான, மனமாறாட்டமுடைய, தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த, (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட.
Creak
n. கிரீச்சொலி, எண்ணெய் இடப்படாத கீல்பொருத்து எழுப்பும் ஒலி, புதுச்செருப்பொலி, (வி.) கிரீச் ஒலியிடு.
Cream
n. பாலேடு, நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு, பாலேடு கலந்த பண்ட வகை, பாலேடு போன்ற தண் குழம்பு, ஒப்பனைக் குளிர் களிம்பேடு, நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை, புரையேடு, சிறந்த பகுதி, சுவைமிக்க கூறு, உயிர்க்கூறு, (பெ.) பாலேடு நிறமான, பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட, (வி.) பாலேடு பிரித்தெடு, ஆடையெடு, பாலேடு கல, பாலேடு போன்றதாக்கு, பாலேடுபோல் ஆடை திரையச் செய், பாலேடு தோய்வி, பாலேடாக உருவாகு, ஆடையாகு, ஆடைபோல்ப் படர், சிறந்த பகுதியைப் பிரித்தெடு, உயிர்க்கூறு அகற்று.
Cream-cake
n. பாலேடு நிரப்பப்பட்ட அப்ப வகை.
Cream-cheese
n. பாலேட்டிலிருந்து உருவாக்கப்படும் பாலடைக்கட்டி.
Cream-coloured
a. பாலேட்டு நிறமுள்ள, இளமஞ்சள் வண்ணமுள்ள.
Creamer
n. பாலிலிருந்து பாலேடு பிரிப்பதற்குரிய மென்தட்டு, பாலேடு பிரித்தெடுக்கும் பொறி.
Creamery
n. பாலினின்று வெண்ணெய்-பாலடைக் கட்டி உருவாக்கும் நிறுவனம், பால்-வெண்ணெய்-பாலேட்டு விற்பனைக்களம்.
Cream-faced
a. விளரிய தோற்றமுள்ள.
Cream-laid
a. வெண்ணிறத்திடையே நீர்வரைக்குறிகளையுடைய.
Cream-nut
n. பிரேசில் நாட்டுக் கொட்டை வகை.
Cream-slice
n. பாலினின்று பாலேட்டினை எடுக்க உதவும் கத்திபோன்ற மரத்தாலான அலகு.
Cream-wove
a. பாலேட்டு நிறமுள்ளதாக நெய்யப்பட்ட.
Creamy
a. பாலேடு போன்ற, பாலேடு நிறைந்துள்ள, பாலேடு போல் படருகின்ற.
Crease
n. மடிப்புவரை, மடிப்பதால் ஏற்படும் தடம், மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு, (வி.) மடித்து அடையாளம் செய், கோடிட்டு வரம்பிடு, வரைபடிய மடிப்புறு.