English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cretinism
n. கேடயச் சுரப்பி சுரப்பாற்றலிழந்து போவது காரணமாக அங்கக் கோணல் அல்லது தடைப்பட்ட வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலை.
Cretonne
n. சலவையற்ற முரட்டு அச்சடித்த துணி வகை.
Crevasse
n. பனிப்பாறைப் பிளவு, (வி.) பனிப்பாறைகளாகப் பிளவு செய்.
Crevice
n. கீறல், பிளவு, வெடிப்பு, சிறு இடைவௌத.
Crew
n. படகோட்டிகளின் தொகுதி, கப்பலோட்டிகளின் தொகுதி, கும்பல், கூட்டம்.
Crew, v. crow
என்பதன் இறந்தகால வடிவம்.
Crewel
n. திரைச் சித்திர வேலைக்குரிய முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுல், பின்னல் சித்திர வேலைப்பாட்டுக்குரிய கம்பிளி இழை, முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணிமீது செய்யப்படும் சித்திர வேலை, (வி.) முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணி மீது சித்திர வேலை செய்.
Crewman
n. பணிமக்கள் குழுவில் ஒருவர்.
Crib
n. மாட்டுத்தொழு, தீவன அழிஅடைப்பு, தீனித் தொட்டி, கூலப்பெட்டி, உப்புக்குடுவை, குப்பைத்தொட்டி, மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை, மீன் கூடை, தொட்டில், சிறு அறை, குடில், குச்சு வீடு, இடுக்கமான இடம், சிறு அடைப்பு, மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம், சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம், சிறு திருட்டு, திருடிய சிறு பொருள், நுற் கருத்துத் திருட்டு, திருட்டு ஏட்டு வௌதயீடு, மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு, மறைமொழி பெயர்ப்பு, சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு, (வி.) கொட்டிலில் தீவனமிடு, தொட்டியில் இடு, கூடையில் வை, தொட்டிலில் கிடத்து, இடுக்கமான இடத்தில் அடைத்து வை, சிறு திருட்டுச் செய், கருத்துத் திருடு, உரிமையின்றி வௌதயிடு, இசைவின்றிப் படிசெய்.
Cribbage
n. நால்வர் வரை ஆடும் சீட்டாட்ட வகை.
Cribbage-board
n. சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
Crib-biting
n. தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
Cribriform
a. (உள்., தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள.
Crib-work
n. குறுக்கு மரத்துண்டுகளாலான பணிச்சட்டம்.
Criciate
a. (வில., தாவ.) சிலுவை வடிவான, (வி.) வேதனைப்படுத்து, துன்புறுத்து.
Crick
n. கழுத்துச் சுளுக்கு, முதுகுப் பிடிப்பு, (வி.) கழுத்துச் சுளுக்குண்டாக்கு, முதுகுப் பிடிப்புக் கொளுவி.
Cricket
-1 n. சிள் வண்டு, சுவர்க்கோழி, வெட்டுகிளியினப் பூச்சி.
Cricket
-2 n. மரப்பந்தாட்டம், (பே-வ.) நெறிமுறை திறம்பாத ஒன்று, பெருந்தன்மை, (வி.) மரப்பந்தாட்டம் ஆடு.
Cricket
-3 n. மணை, தாழ்வான கோக்காலி.