English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crimping-machine
n. குஞ்சங்களின்மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான இயந்திரம்.
Crimple
v. சுருக்கு, ஒருங்கு இழுத்துக்கொள், மடிப்புகளாகச் செய், சுருள்வி.
Crimson
n. செந்நிறம், சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம், (பெ.) திண் சிவப்பான, (வி.) திண் சிவப்பாக்கு, செவ்வண்ணம் தோய்வி, திண் சிவப்பாகு, முகஞ்சிவப்புறு, நாணங்கொள்.
Cringe
n. இச்சக நடத்தை, கெஞ்சுதல், பணிவு, (வி.) அஞ்சி ஒடுங்கு, தாழ்ந்து வணங்கு, கீழ்ப்படி, கெஞ்சு, இச்சகம் பேசு, புகழ்ந்து பசப்பு.
Cringing
a. கெஞ்சுகிற, கெஞ்சுதலான.
Cringingly
adv. கெஞ்சுதலாக.
Cringle
n. கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம், கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு, கயிற்று வளையத்தில் கோத்த கயிறு.
Crinite
a. மயிர்மூடியுள்ள, (தாவ.) மயிர்க்குஞ்சம் போன்ற.
Crinite
n. முள் நிறைந்த முட்டை வடிவத் தோட்டுக் கடல்வாழுயிர்களின் புதைபடிவம்.
Crinkle
n. திரை, சுருக்கம், கொய்சகம், திருக்கு, சுருள்வு, (வி.) முறுக்கு, சுருக்கு, திரை, மொறுமொறுப்பாக்கு, சுருங்கு, சுருள்.
Crinkly
a. சுருக்கங்கள் நிறைந்த.
Crinkum-crankum
n. கோணல்மாணலான பொருள், (பெ.) கோணல்மாணலான.
Crinoid
n. (வில.) புதைபடிவக் கல்லுருவில் காணப்படும் கொடி போன்ற காம்பிலிணைக்கப்பட்ட அல்லி வடிவக் கடுந்தோட்டுக் கடல்வாழ் உயிரினம், (பெ.) அல்லிமலர் வடிவுடைய.
Crinoidea
n. pl. (வில.) முட்டைவடிவத் தோட்டினுள் வாழும் அல்லி வடிவக் கடல்வாழ் உயிர்ப்பேரினம்.
Crinolette
n. மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
Crinoline
n. குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை, விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை, சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை, நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Crio-sphinx
n. ஆட்டுத்தலைச் சீயாங்கனை, சிங்க உடல்மீது ஆட்டுத்தலை அமைந்த உரு.
Cripple
n. நொண்டி, சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம், (பெ.) நொண்டியான, (வி.) நொண்டியாக்கு, ஆற்றல் கெடு, பழுதுபடுத்து, நொண்டிநட.
Crippling
n. கட்டிடத்தின் பக்கத்துக்கு இடப்படும் முட்டு.
Crisis
n. திரும்புக்கட்டம், கண்டம், அரசியல் திருப்புமையம், வாணிக நெருக்கடி.