English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Croat
n. குரோஷியா இனத்தவர்.
Croceate, croceous
செம்மஞ்சள் நிறமான.
Crochet
n. கொக்கி ஊசியைக்கொண்டு இழைக்கண்ணிகள் இட்டுச் செய்யப்படும் வலைப்பின்னல் வேலை, கொக்கி ஊசியைக்கொண்டு பின்னப்படும் பொருள், (வி.) கொக்கி ஊசியைக்கொண்டு இழைவலைப்பின்னல் பின்னு, கொக்கி ஊசியைக்கொண்டு சால்வை பின்னு.
Crocidolite
n. நீலக் கல்நார், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை.
Crock
-1 n. மண்குடம், சாடி, ஒட்டுச்சில்லு, பூத்தொட்டயிலுள்ள துளையை மூடுவதற்காகப் பயன்படும் உடைந்த மட்பாண்டத் துண்டு, (பே-வ.) உலோகக் கலம்.
Crock
-2 n. அழுக்கு, கறை, (வி.) மாசுபடுத்து, கறையாக்கு.
Crock
-3 n. கிழக்குதிரை, கிழப் பெட்டைச் செம்மறியாடு, திறமையற்றவர், தளர்ந்துபோனவர், ஏலாதவர், செயல் அற்றுப்போனவர், (வி.) செயலற்றுப்போ, ஆற்றல்கெடு.
Crockery
n. மட்பாண்டத் தொகுதி, சுட்ட களிமண் கலங்களின் தொகுதி.
Crocket
n. (க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு.
Crocodile
n. முதலை, முதலை இன விலங்கு வகை, பதனிட்ட முதலைத் தோல், பள்ளி மாணவர் இரண்டிரண்டுபேராக நடந்து போகும் அணி.
Crocodility
n. (அள.) குற்றங்காணும் நோக்குடன் வாதிடல்.
Crocodilus
n. (வில.) முதலைகள் உள்ளிட்ட ஊரும் விலங்கினம்.
Crocus
n. (தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை, மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை.
Croeodilia
n. (வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Croesus
n. பெரும் பணக்காரர்.
Croft
n. குடியிருப்படுத்த சிறுவிளை நிலம், சிறுபண்ணை, அடைப்பிட்ட நிலம்.
Crofter
n. சிறு விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் தங்கி உழைக்கும் குத்தகை உழவன்.
Cro-Magnon
n. பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை, (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Cromlech
n. குத்துக்கல் வட்டம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம்.
Cromorna, cromorne
துளை இசைக்கருவியின் அழுத்து கட்டை, குழலிசைக்கருவி.