English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crisp
n. முறுகுறுவல், முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல், (பெ.) முறுகலான, பொருபொருப்பான, மொறுமொறுப்பான, உரமூட்டுகிற, ஊக்கம் தருகிற, உறுதியளிக்கிற, செயல் விரைவுடைய, விரைந்து முடிக்கிற, சுறுசுறுப்பான, எளிதில் நொறுங்குகிற, குறுகலான, சிறுசிறு துண்டான, சுருட்டையான, சுருண்டு நௌதகிற, அலையலையான, (வி.) சுருட்டையாக்கு, சுருட்டையாகு, அலையலையாக நௌதவி, அலையலைகாகச் செல்.
Crispate, crispated
சுருள்சுருளான-அலையலையான தோற்றமுடைய, (தாவ., வில.) அலையலையான விளிம்பினை உடைய.
Crispation
n. சுருள்களாகச் செய்தல், சுருள்வு, அலையலையான தோற்றம், அலையலையான இயக்கம், சுருங்குதல், சுரிப்பு.
Crisping-iorn, crisping-pin
n. சுருள்களாகச் செய்வதற்கான இரும்புக்கருவி.
Crisps
n. pl. முறுகிய உருளைக்கிழங்கு வறுவல், முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல்.
Crispy
a. சுருள்களாக உள்ள, மொரமொரப்பான, எளிதில் நொறுங்குகிற, சுறுசுறுப்பான.
Criss-cross
n. அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி, குறுக்குக்கோடு, குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம், கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம், குறுக்கு மறுக்குக்கட்டம், குறுக்கு வலைப்பின்னல் படிவம், அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி, ஆட்டவகை, மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம், (பெ.) குறுக்கு மாறுக்கான, குறுக்கு வெட்டுக் கோடுகளாலான, சிடுசிடுப்பான, (வி.) குறுக்குமறுக்காகச் செல், குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை, அடிக்கடி குறுக்கிட்டுச் செல், (வினையடை) குறுக்கு மறுக்காக, நோக்க முரண்பாட்டுடன், மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Crista
n. தலைச்சூட்டு, கொண்டை.
Cristate
a. (தாவ., வில.) தலைச்சூட்டினையுடைய.
Criterion
n. அளவைக்கட்டளை, மூலப்பிரமாணம், ஒப்பளவு முதல், கட்டளைவிதி, பிரமாணசூத்திரம், அடிப்படைத் தத்துவம், தேர்வுமுறை, சோதனை.
Critic
n. திறனாய்வாளர், தேர்வறிஞர், நடுநிலையறிஞர், பத்திரிகை மதிப்புரை எழுதுபவர், ஏட்டாராய்ச்சியாளர், பாடபேத ஆய்வாளர், குறைகாண்பவர், கண்டிப்பவர்.
Critical
a. திரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.
Criticaster
n. கீழ்த்தரத் திறனாய்வாளர்.
Criticism
n. திறனாய்வு, நடுநிலைமதிப்பீடு, இலக்கிய ஆராய்ச்சித்துறை, கவின்கலை ஆராய்ச்சி, திறனாய்வுக் கட்டுரை.
Criticize
v. குணங்குறை விளக்கங் கண்டு மதிப்பிடு, நுண்ணிதின் ஆய்ந்து வாதாடு, குற்றங்காண், குறைகூறு, கண்டி.
Critique
n. தனி ஏடு பற்றிய திறனாய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை, திறனாய்வுக் குறிப்பு, அறிவாராய்ச்சிக் கலை.
Crme
n. (பிர.) பாலேடு, பாலேடுள்ள பொருள்கள்.
Croak
n. கரகரப்பான ஒலி, தவளை கத்தும் ஓசை, அண்டங்காக்கைக் கரைவு, (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு, அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு, கரகரப்பான ஒலிசெய், அடித்தொண்டையில் பேசு, புலம்பு, முணுமுணுப்புச்செய், கேட்டின் முன்னறிகுறி காட்டு.
Croaker
n. கரகர ஒலி எழுப்புபவர், கத்துவது, முணுமுணுப்பவர், கேட்டினை முன்னறிவிப்பவர்.