English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crow-bar
n. கடப்பாரை, நெம்புகோலாகப் பயன்படும் கடை வளைந்த இரும்புக் கம்பி.
Crowberry
n. சதுப்பு நிலப் படர் குத்துச் செடிகளில் உண்டாகும் சிறு கறுப்புப் பழ வகை.
Crow-bill
n. காயங்களிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளை எடுக்கும் மருத்துவச் சாமணம்.
Crowd
n. மக்கள் திரள், கூட்டம், ஒழுங்குமுறையற்ற ஆட்களின் தொகுதி, கும்பல், திரள், நெருங்கிய தொகுதி, (வி.) ஒருங்கு கூட்டு, திரட்டு, ஒருங்கு கூடு, கூட்டமாகச் சேர், கும்பலாக்கு, திரள், திணித்து நிரப்பு, நெருக்கு, நெருங்கு, மொய்.
Crowfoot
n. திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை, படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள், (கப்.) மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி.
Crown
n. அணிமுடி, மகுடம், பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம், மன்னுரிமைத் தலைக்கவிகை, முடியரசு, முடியாட்சி, முன்னுரிமை, அரசுரிமை, முடியரசர், மன்னர், ஆட்சியுரிமை, பூமுடி, வெற்றி குறித்த வாகை மலர்முடி, முடிவடிவான அணிமணி, தலைசிறந்த பூணணி, முகடு, உச்சி, தலையுச்சி, மண்டை, தொப்பியின் மேற்பகுதி, மலைக்குவடு, சிகரம், கட்டுமான மேன்முகப்பு, வளைவின் மேற்கூம்பு, மணிக்கல்லின் பட்டை முகப்பு, பல்லில் காணத்தகும் மேற்குவடு, குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி, மான் கொம்பின் தலைக்கூம்பு, தண்டு-வேர்ச்சந்திப்பு, தண்டங்கிழங்கு, ஐந்து வௌளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம், 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள், உயர்தகைமை, நன்முடிபு, இன்ப நிறைவேற்றம், முத்தாய்ப்பு, (வி.) முடி கவி, முடி சூட்டு, அரசபதவி ஏற்று, தலைமீது வை, உச்சிமீது அமை, கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு, அரசுக்குரிய மதிப்பளி, மேன்மைப்படுத்து, அழகு செய், நிறைவு செய், மகிழ்வான மேன்மைப்படுத்து, அழகு செய், நிறைவு செய், மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா, வெற்றிகரமாக முடி.
Crown-agent
n. ஸ்காத்லாந்தில் குற்றவியல் சார்ந்த அரசியல் குற்றச்சாட்டுக்களைத் தயாரிக்கும் வழக்கறிஞர்.
Crown-antler
n. மான் கொம்பின் உச்சிப்பகுதி.
Crown-bark
n. கொயினா மரப்பட்டை வகை.
Crown-cap
n. குப்பியில் முத்திரையிட்டு மூடுவதற்குரிய உள்வரியிட்ட உலோகமூடி.
Crowned
a. முடியணிந்த, முடி கவிக்கப்பெற்ற, அரசுரிமை பெற்ற.
Crownet
n. பெருமக்கள் அணிமுடி.
Crown-gall
n. நுண்மங்களால் ஏற்படும் கட்டிபோன்ற தாவர நோய்வகை.
Crown-glass
n. கார சுண்ணகக் கண்ணாடி, வட்டச் சில்லுகளாக உள்ள பலகணிக் கண்ணாடி.
Crown-graft
n. மரத்திற்கும் பட்டைக்கும் இடையில் இளந்தளிர் நுழைத்து ஒட்டிணைத்தல்.
Crown-green
n. பந்தாட்டத்துக்குரிய கவிவான புல் நிலத்தளம்.
Crown-head
n. கட்ட ஆட்டத்தில் பின் வரிசைக்கட்டம்.
Crown-imperial
n. அல்லியினச் செடி வகை.
Crown-jewel
n. மகுடமணி, அரசருக்குரிய அணிமணி.
Crown-land
n. மன்னர் தனியுரிமை நிலம்.