English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crucifix
n. சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம்.
Crucifixion
n. சிலுவையேற்றம், இயேசுநாதரின் சிலுவை ஏற்றப்படம்.
Cruciform
a. சிலுவை உருவுடைய.
Crucify
v. சிலுவையில் அறைந்து கொலை செய், சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து, போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி, முழுதும் கீழ்ப்படுத்து, செயலடக்கு, துன்புறுத்து, வேதனை செய், கொடுமைப்படுத்து, அவாக் கொல்லு, பழிபாவம் ஒறு, தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு, கடுநோன்புக் குள்ளாக்கு.
Crucigerous
a. சிலுவை தாங்கியுள்ள.
Crude
a. இயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற.
Crudity
n. பக்குவமடையா நிலை, அனுபவமற்ற தன்மை, செயல் முற்றுப்பெறாத நிலை, பண்படாமை, கரடு முரடானது, திருத்தம் பெறாதது.
Cruel
a. கொடுமையான, துன்புறுத்துகிற, துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற, உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, நாகரிகம் அற்ற, கடுமையான, கடுங்கண்டிப்பான, வேதனை தருகிற.
Cruel-hearted
a. கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற, கடின சித்தமுள்ள, இரக்கமற்ற.
Cruells, cruels
கண்டமாலை நோய்.
Cruet
n. உணவு மேசையில் வைக்கும் ஊறுகாய்க் கலம், சுவைப்பொருள் சாடி, திருக்கோயில் நீர்க்குடுவை, திருநெய்க்குவளை, தேறல் கலம்.
Cruet-stand
n. திருக்கலவடை, சமயச் சடங்குகளுக்கான இன்தேறல்-எண்ணெய் முதலியவை கொண்ட கலங்களைத் தாங்கும் சட்டம்.
Cruise
n. கடல்உலா, கப்பற் சுற்றுப்பயணம், சுற்றுலா, (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல், உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி, தேடித்திரி.
Cruiser
n. கடலில் திரிபவர், விரை போர்க்கப்பல், தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல், காவற் கப்பல், வேவு கலம், இன்ப உலாப்படகு.
Cruiser-weight
n. கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர், இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர்.
Crumb
n. அப்பத்துண்டு, சிறு துணுக்கு, பொருக்கு, சிறு பகுதி, அப்பத்தின் மென்மையான உட்பகுதி, (வி.) சிறு துணுக்குகளாக்கு, இடி, பொடி, அப்பத்துண்டுகளை உள்ளிடு, அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு, துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து, தூள்படு, பொடியாகு, நொறுக்கு, துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Crumb-brush
n. மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம்.
Crumb-cloth
n. அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி, முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
Crumble
n. துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு.
Crumbly
a. நொறுங்கத்தக்க, பொடியாகக்கூடிய.