English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crown-law
n. குற்றச்சட்டம்.
Crown-lawyer
n. குற்ற வழக்குகளில் அரசர் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்.
Crownlet
n. சிறு மணிமுடி.
Crown-piece
n. ஐந்து வௌளி கொண்ட பிரிட்டிஷ் நாணயம்.
Crown-post
n. விட்டத்திலிருந்து மோட்டுமுகடு தாங்கும் செங்குத்தான ஆதார விட்டம்.
Crown-saw
n. வாய்முகப்பில் பல்வரிசையுள்ள குழல் வடிவான வாள்.
Crown-wheel
n. தன் தளத்திற்குச் செங்குத்தான பல் வரிசைகள் உள்ள சக்கரம்.
Crown-work
n. இரு காவலரண்களின் புறமுகடுகளுக்கு இடைப்பட்ட உள்வளைவு.
Crow-quill
n. காக்கை இறகு, முற்கால மைக்கோல்.
Crows-foot
n. முதியவர்களின் கடை விழியருகில் தோன்றிப் படரும் சுருக்கம், படைத்துறையில் பகைவர்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல் நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்.
Crows-footed
a. காகக் காற்குறியுடைய.
Crow-shrike
n. சரசரவென அரவமிடும் கருமை வெண்மை இடை கலந்த நிறமுடைய ஆஸ்திரேலியக் காக இனப் பறவை வகை.
Crows-nest
n. (கப்.) சுற்றுக்காட்சி காவற்பணியாளர்களுக்குரிய உயர்மேடை.
Crow-steps
n. pl. முக்கோணச் சுவர் முகட்டின் மீதுள்ள படிகள் போன்ற அமைப்பு.
Crucain
n. தாடி போன்ற அமைப்பற்ற குளத்து மீன் வகை.
Crucial
a. கடுஞ்சோதனையான, சிக்கல் மையமான, முடிவுக்கட்டமான, தீர்வுக்குரிய, முடிவைத் தீர்மானிக்கிற, நெருக்கடியான, மிகு முக்கியமான, சிலுவை போன்ற, சிலுவை உருவுள்ள.
Crucible
n. மூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை.
Crucifer
n. சிலுவை தாங்கி, ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர், சிலுவை போன்ற மலர்ச் செடிவகை.
Cruciferous
a. சிலுவை தாங்குகிற, சிலுவை அணிந்த, சிலுவை மேற்கொண்ட, சிலுவையால் அணி செய்யப்பட்ட, சிலுவை அடையாளமிடப்பட்ட, சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய, சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
Crucifier
n. சிலுவையில் அறைபவர், துன்புறுத்துபவர், கொடுமைப் படுத்துபவர்.