English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Crush-room
n. கேளிக்கை இடைவேளையில் பார்வையாளர் உலாவும் அறை.
Crust
n. மேல் ஓடு, மேல் தோல், பட்டை, அப்பப் பொருக்கு, அப்பத்தின் புறப்பகுதி, நிலவுலகின் புறத்தோடு, (வி.) மேலோட்டினால் மூடு, பொருக்காகத் திரள்.
Crusta
n. உள்வரியாய் இடுவதற்குச் சித்தம் செய்யப்பட்ட துணி, கெட்டி மேற்பூச்சு, சர்க்கரை உறைந்த விளிம்புடைய கண்ணாடிக் கலத்தில் ஊற்றப்பட்ட தேறல் கலவை வகை.
Crustacea
n. pl. (ல.) நண்டு-நத்தை உள்ளடக்கிய கடலுயிர் இனப்பெருக்கம் பிரிவு.
Crustacean
n. நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய கடலுயிரினஞ் சார்ந்த ஒன்று, (பெ.) நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய.
Crustaceous
a. மேல்தோடுடைய.
Crustal
a. மேல்தோடு சார்ந்த.
Crustate, crustated
மேல்தோட்டால் மூடப்பட்ட.
Crustation
n. ஒட்டிக்கொண்டிருக்கும் மேல்தோடு.
Crusted
a. தோட்டினை உடைய, பொருக்கினை உடைய, மதுவகையில் பொருக்குப் படியவிட்டுள்ள, மிகப் பழங்காலத்திய, காலங்கடந்த, பழமை சான்ற மதிப்புடைய.
Crusty
a. மேல்தோடுடைய, பொருக்குடைய, மேல்தோட்டின் இயல்புடைய, பொருக்குப்போன்ற, கடினமான மேற்பகுதியுள்ள, கடும் புறத்தோற்றமுள்ள, சிடுசிடுப்பான, நறுக்கென்ற, வெடுக்கென்ற.
Crutch
n. முடவன் கோல், கவட்டுக் கட்டை, ஆதாரம், உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு, இரு கிளை பிரியும் கவடு, மனித உடலின் கவட்டுக் கூறு, குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி, (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு, (வி.) தாங்கு, மூட்டுக்கொடு, ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Crutched
a. சிலுவை அடையாளமுள்ள, சிலுவையணிந்த.
Crutched Friars
n. சிலுவை அடையாளம் அணிந்துள்ள கிறித்தவத் துறவிகளின் பிரிவு.
Crux, n. pl. cruxes, cruces.
சிலுவை, கடும்புதிர், கடுஞ்சிக்கல், இன்னல் அல்லது குழப்பம் உண்டாக்கும் பொருள், முடிவுத் தீர்வுக்குரிய திருப்பம், அறுதி செய்ய உதவும் கூறு, சிக்கலின் உயிர்க்கூறு.
Crwth
n. வேல்ஸ் நாட்டுப் பண்டைய நரப்பிசைக் கருவி வகை.
Cry
n. கூக்குரல், கூவிளி, கூப்பாடு, கூப்பிடுகை, அழைப்புக்குரல், அழுகை, புலம்பல், கூச்சல், ஆரவாரம், பேரொலி, உரத்துக் கூவுதல், முழக்கம், அலறல், கத்துதல், கதறல், விலங்கொலி, புட்குரல், மக்கட் குரல், கரைதல், பொதுச் செய்தி, வதந்தி, வேண்டுகோள், கோரிக்கை, போர்க்குரல், போராட்டக்குரல், சமிக்கைக் குரல், விற்பனையாளர் கூக்குரல், தகரங்களின் சலசலப்பு, வேட்டைநாய்த் தொகுதி, (வி.) கூவு, அழு, புலம்பு, கூக்குரலிட்டழு, கத்து, கதறு, அலறு, கூச்சலிடு, ஆரவாரம் செய், முழக்கமிட்டுக் கூறு, சாற்று, பொதுவில் அறிவி, விற்பனை கூறு, கூலி விலைகூறு, விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு, கரைவுறு, வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Cry-baby
n. சிறு பிள்ளைத்தனமாக அழுபவர்.
Crying
n. உரத்து அழைத்தல், அழுதல், (பெ.) உரத்து அழைக்கிற, கவனிக்கப் படவேண்டிய, மிக முக்கியமான, மிக மோசமான.
Cryoconite
n. துருவப் பனிப்பரப்பின் மீது காணப்படும் தூசி.