English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cryogen
n. (வேதி.) உறைகலவை, குறைந்த தட்பவெப்ப நிலை ஏற்படுத்த உதவும் பொருள்.
Cryogenics
n. தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை.
Cryogeny
n. குளிர்முறை பாதுகாப்பு, தாழ்ந்த தட்பவெப்ப நிலை உண்டுபண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.
Cryolite
n. பனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
Cryometer
n. தாழ்நிலை தட்பவெப்பமானி.
Cryophorus
n. ஆவியாதலால் நீரின் தட்பவெப்பநிலை குறைவதை அளவிட்டுக் காட்டும் கருவி.
Cryoscope
n. உறை நிலையை அறுதியிட்டு வரையறுக்க உதவும் கருவி.
Cryoscopy
n. கரைபொருள்களால் கரைநீர்களின் உறை நிலைகளில் ஏற்படும் மாறுபாட்டைப் பற்றிய ஆய்வாராய்வு.
Cryostat
n. ஆவியாதலின்மூலம் குளிர்ச்சியடைதலை விளக்கிக் காட்டும் கருவி, ஆவியாக்குவதன் மூலம் தாழ்ந்த தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்தும் கருவி.
Cryotron
n. நிறைநேர் இன்மைக்குறிக்குச் சற்றே மேற்பட்ட தட்பவெப்பநிலையுடைய நீரியல் கதிர நிறைநீரமிழ் கலத்தில் இயங்கும் சிறு திற மின்ம இயக்கக் குமிழ்.
Crypt
n. நிலவறை, திருக்கோயில்களுக்கடியிலுள்ள புதை இடம், (வில.) சிறு பள்ளம், குழாய்ச் சுரப்பி.
Cryptadia
n. pl. மறைவடக்கமாக வைக்கப்படவேண்டிய செய்திகள்.
Cryptaesthesia
n. புலன்கடந்த பேருணர்வு, தொலைவில் உணர்தல், பிறிதிடக்காட்சி.
Cryptal
a. கீழறை சார்ந்த, நிலவறைபோன்ற, பிணம் புதைக்கும் நிலவறை இயல்பான.
Cryptic, cryptical
மறைவான, கட்புலப்படாத, புதைவான, மறைபுதிரான, (வில.) மறைகாப்பான, பாதுகாப்புக்காக மறைவான.
Crypto, crypto-communist
n. அரசியல் கோட்பாடுடன் மறைமுக ஈடுபாடுடையவர், பொதுவுடைமைக் கட்சி அரசியல் கோட்பாட்டுடன் மறைமுக ஈடுபாடுடையவர்.
Cryptocrystalline
n. உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
Cryptogam
n. குறிமறையினச் செடி, பூவில்லாச் செடி இனத்தைச் சார்ந்த செடி.
Cryptogram, cryptograph
n. குழுஉக்குறியில் ஆன எழுத்து.
Cryptology
n. மறைமொழி, பிறரறியாத் தனிக்குழுமொழி.