English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cubbish
a. விலங்கின் குட்டி போன்ற, அருவருப்பான, நடத்தை கெட்ட, குறும்பான.
Cubby, cubby-hole
n. சுற்றுக்கட்டான இன்ப வாய்ப்பிடம்.
Cube
n. சரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
Cubeb
n. உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய்.
Cub-hunting
n. ஓநாய்க் குட்டிகளை வேட்டையாடுதல்.
Cubic
a. கனசதுர வடிவான, கனசதுரஞ் சார்ந்த, கன அளவைக்குரிய, மூவளவைக் கூறுடைய, மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த, மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய.
Cubica
n. ஆடையின் உள்வரித் துணியாகப் பயன்படும் முறுக்கிய மென் கம்பள நுல்.
Cubicle
n. படுக்கையறை, தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி, பள்ளிக்கூடத்தின் துயிலறை, தனி அறை.
Cubism
n. புதுமுறை ஓவியப் பாணி, கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
Cubit
n. கைம்முழம், முழக்கோல், முழம், பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை.
Cubital
a. முழ அளவு கொண்ட, விலங்கின் முன்காலின் முன்பகுதிக்குரிய.
Cuboid
n. இணைவகத் திண்மம், ஆறு இணைவக முகப்புகளை உடைய திண்ம உரு, (பெ.) கனசதுர வடிவொத்த.
Cuboidal
a. கனசதுர வடிவொத்த.
Cub-reporter
n. செய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர்.
Cucking-stool
n. (வர.) தண்டமணை, சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி, சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Cuckold
n. மனைசோரவிட்ட கணவன், மறைநடைப் பெண்டிரின் கணவன், (வி.) கணவனை ஏய்த்தொழுகுதல்.
Cuckoldom, cuckoldry
ஒழுக்கமிழந்த மனைவியை உடையவனின் நிலை, கணவனை ஏய்த்தொழுகுதல்.
Cuckoo
n. குயில் வகை, மட்டி, பேதை.
Cuckoo-clock
n. மணியடிப்பதற்குப் பதில் குயில் கூவுதல் போன்ற அமைப்புடைய மணிப்பொறி.
Cuckoo-flower
n..மலர் வகை, சிவந்த மலருள்ள காட்டுச் செடி வகை.