English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cuckoo-fly
n. பொன்வண்டு, தேனீக்கள் கூட்டிலும் குளவிகள் கூட்டிலும் முட்டையிடும் வண்டு வகை
Cuckoo-pint
n. புள்ளிகளுள்ள மலர்ச் செடிவகை.
Cuckoo-spit, cuckoo-spittle
n. பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
Cuckoo-spit, cucullated
a. முகமூடி வடிவான, தலைமுடி அணிந்த, முக்காடிட்ட.
Cucumber
n. வௌளரிக்கொடி, வௌளரிக்காய், கத்தரிக்காய்.
Cucumber-tree
n. விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
Cucurbit
n. சுரைக்காய் வடிவுள்ள வடிகலம், வாலைக்குடுவை.
Cucurbitaceous, cucurbital
a. சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த, சுரைக்காய் போன்ற.
Cud
n. அசை ஊண், அசை போடுதல், அசை போட்டு வாங்கும் உணவுக்கூறு.
Cudbear
n. காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள், காளான் வகை.
Cuddle
n. அரவணைப்பு, ஆர்வத் தழுவல், (வி.) அணை, தழுவு, செல்லங் கொஞ்சு, சீராட்டு, அரவணைத்துக்கிட.
Cuddy
-1 n. கப்பற் சிறு அறை, கப்பற் சமையல் அறை, பெருங் கலங்களின் மேலாளின் தனி அறை.
Cuddy
-2 n. கழுதை, பேதை, அறிவிலி, மீன் வகையில் குஞ்சு, பாறைகளை உயர்த்த உதவும் முக்காலி மீதமைந்த நெம்புகோல்.
Cuddy
-3 n. பண்ணைக் கீழ்வாரத்தாரிடமிருந்து களியாட்டம் பெற மேலாளாரின் உரிமை, பண்ணை நிலவர்.
Cudgel
n. குண்டாந்தடி, குறுந்தடி, கைத்தடி, (வி.) கைத்தடியாலடி, குண்டாந்தடியாலடி.
Cudgel-proof
a. அடித்தலுக்கு மசியாத.
Cudweed
n. மலர்களைச் சுற்றிச் செதிள்களையுடைய செடி வகை.
Cue
-1 n. நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல், நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு, நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி, பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு, சரிநேர்வழி.
Cue
-2 n. தலைப்பின்னல், சடை, மேடைக் கோற்பந்தாட்டத்தின் கோல், (வி.) பின்னல் முறுக்கிவிடு.
Cue-ball
n. மேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து, கோலடிபட்ட பந்து.