English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cryptomeria
n. ஜப்பானிய தேவதாரு மர வகை.
Cryptonym
n. மறைபெயர், பிறரறியாப் பெயர்.
Crystal
n. பளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வௌதக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஔத ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஔத ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌதவான.
Crystal-gazing
n. பளிங்குக் கோளத்தின்மூலம் மறைநிலைத் துறையினர் காணும் மறைவௌதக்காட்சி.
Crystalline
n. பளிங்கு, பளிங்கு இயல்புடைய பொருள், பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை, (பெ.) பளிங்கு போன்ற, படிகம் போன்ற, பளிங்கியலான, மாசுமறுவற்ற, படிகம்போன்ற அமைப்புடைய, பளிங்காலான, பளிங்குப் பகுதிகளையுடைய, படிகப் பகுதிகள் கொண்ட.
Crystallite
n. சரியாக உருவாகாத படிகம், தொடக்க நிலைப்படிகம், கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு.
Crystallitics
n. கண் முகப்புக் குமிழின் அழற்சி.
Crystallize
v. படிகங்களாகு, பளிங்காகு, மணி உருப்படுத்து, மணி உருப்பெறு, உறுதிப்பெறு, இறுகு, உறுதியாக்கு, கெட்டியாக்கு, உருப்படுத்து, உருப்படு, நிலையான உருப்பெறு.
Crystallogenesis
n. படிகங்களின் தோற்றம், படிகப் பிறப்பு.
Crystallography
n. படிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.
Crystalloid
n. படிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
Crystallomancy
n. பளிங்கு போன்ற பொருள்களின்மூலம் வருவது குறித்தல்.
Ctene
n. கடல் வாழுயிர் வகையின் சீப்புப் போன்ற நீந்தும் அமைவு.
Cteniform, ctenoid
சீப்புப்போன்ற செதிள்களுடைய மீன்வகை, சீப்புப்போன்ற பல்வரிசையுடைய மீன்வகை, (பெ.) சீப்புப்போன்ற வடிவுடைய.
Ctenophora
n. சீப்புப் போன்ற செதிளுறுப்புக்களால் நீந்தித் திரிகின்ற கடல் வாழுயிர்வகை.
Cub
-1 n. குருளை, நாய் இன விலங்கினங்களின் குட்டி, குட்டி நரி, சிங்கக் குட்டி, கரடிக் குட்டி, ஓநாய்க் குருளை, சிறுவர், சிறுமி, குறும்பர், பண்படாச் சிறுவர், பயிற்சிச் சாரணச் சிறுவன், அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர், (வி.) குட்டி ஈனு, குட்டி நர
Cub
-2 n. கால்நடைக் கொட்டில், பெட்டி.
Cubage, cubature
கன அளவு, கன அளவுகாணல்.
Cuban
n. கியூபா நாட்டான், கியூபா நாட்டுக் குடிமகன், (பெ.) கியூபா நாட்டைச் சார்ந்த, கியூபா நாட்டு மக்களைச் சார்ந்த.