English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cantrip
n. மாயக்காரியின் சூழ்ச்சி வித்தை, சிறு குறும்பு, குறும்புச்செயல்.
Canvas
கித்தான், திரைச்சீலை, திரட்டு சித்திரப்படம்
Canvas
n. கப்பற் பாய்த்துணி, கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி, கித்தான், சித்திரப்படாம், கெட்டி மெழுகார்ந்த துணி, திரைச்சீலை, பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை, (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Canvas-back
n. முதுகுப்புறம் சாம்பல் வண்ணமும் கோணலான கொடுகளுமுடைய தென் அமெரிக்க வாத்து வகை.
Canvass
n. நுண்ணாய்வு, தேர்தலாதரவு நாட்டம், ஆதரவுக் கோரிக்கை, (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு, ஆதரவு கோரிச் செல், வாணிகத் தொடர்பு வேண்டு, வாடிக்கை திரட்டு, பங்குகள் பெறும்படி தூண்டு, ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய், சுண்டிப்பார், குலுக்கிப்பார்.
Canvasser
n. வாக்குரிமை வேண்டுபவர், நுணுகி ஆராய்பவர்.
Canvas-stretcher
n. நெய்வண்ண ஓவியம் வரைவதற்கான திரைச்சீலையைத தாங்கும் மரச்சட்டம்.
Canvas-work
n. திரைச்சீலைமேல் செய்யப்படும் சித்திரப் பூ வேலை.
Canyon
n. கெவி, விடர், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு.
Canzonet, canzonetta
n. பல உறுப்புக்களைக் கொண்ட சிறிய உணர்ச்சிப் பாடல் வகை.
Caoriccio
n. (இத்.) விளையாட்டு நடவடிக்கை, (இசை.) விறுவிறுப்பான இசைப்பாடற் பகுதி, கட்டுப்பாடற்ற இசைப்பாடல்.
Caoutchouc
n. கெட்டிப்படாத ரப்பர், (பெ.) கெட்டிப்படாத ரப்பரைச் சார்ந்த.
Cap
n. குல்லாய், துணியாலான மகளிர் தலைச்சீரா, விளிம்பில்லாத தொப்பி, கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி, நச்சுக்காளானின் மேற்பகுதி, முகடு, மேற்பகுதி, வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை, கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு, வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல், (வி.) குல்லாய் அணி, முப்ப்பு வாயினை மூடு, குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து, மேம்பட்டு முந்து, கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள், குல்லாய் உயர்த்தி வணக்கம் செய், உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Cap,tivating
மருட்சியூட்டுகிற, வசப்படுத்துகிற.
Capability
n. செயல் வல்லமை, திறமை, செயற்படுவதற்குரிய இயல்பு, முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி.
Capable
a. கூடிய, செயற்படும் இயல்பு வாய்ந்த, தகுதி பெற்றுள்ள, செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த, வல்லமையுடைய, தனி ஆற்றல் உடைய.
Capacious
a. இடமகன்ற, விரிந்த, பரந்த, உள்ளிடமிக்க, மிகுதி உட்கொள்ளக்கூடிய.
Capacitance
n. மின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு.
Capacitate
v. திறமையூட்டு, தகுதிபெறச் செய்.
Capacitor
n. மின்னியல் உறைகலம்.