English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Capacity
n. பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
Cap-a-pie
adv. கவச வகையில் தலைமுதல் கால் வரைக்கும், முடிமுதல் அடி வரை.
Caparison
n. குதிரையின் அணிமணிப் பூட்டு, முழு ஆடை அணிமணி, (வி.) குதிரையை முழுதும் அணிமணிப்பூட்டி ஒப்பனைசெய், முழுஆடை அணிமணிபூட்டு.
Caparison
n. மேற்சட்டையோடு இணைக்கப்பட்ட தோள் அணியாடை, கையற்ற தளர் மேற்சட்டை.
Cape
-2 n. நிலறனை, நிலக்கோடி, கரைக்கூம்பு, (வி.) ஒரு நேர் வழியைப்பற்றிச் செல்.
Capelin
n. தூணிடலிரையாகப் பயன்படுத்தப்படும் சிறு மீன் வகை.
Capeline
n. இரும்பாலான சிறு மண்டைக் கவிகை, மாலைப்போதுக்குரிய மென் கம்பளியாலான முகத்திரை, அறுவை மருத்துவத்துக்குரிய தலைக்கட்டு.
Capella
n. விண்மீன் குழுவகையின் ஔதமிக்க முதல் விண்மீன்.
Capenter-scene
n. நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி, ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Caper
-1 n. துள்ளல், குதியாட்டம், கேலிக்குரிய நடை, (வி.) துள்ளிக்குதி, குதியாட்டம்போடு.
Caper
-2 n. தென் ஐரோப்பிய முட்செடி வகை.
Capercaillie, capercailye, capercailzie
n. மிகப் பெரிய கோழியினத்தின் வகை.
Caperer
n. துள்ளிக்குதிப்பவர், துள்ளித்திரிவது, முட்டைப் புழுப் பருவத்தில் தூண்டிற்புழுவாகப் பயன்படும் ஈயினத்தின் வகை.
Capernaite
n. பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர், இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Capers
n. ஊறுபதனமிடப்பட்ட தென் ஐரோப்பிய முட்செடி வகையின் மலர்.
Caper-sauce
n. முட்செடி வகையின் மலர் கலந்த காரச்சுவையூட்டப் பொருள்.
Capful
n. தொப்பி நிரப்பும் அளவு, சிறிது.
Capias
n. (ல.) சிறையாணைச்சீட்டு.
Capillaceous
a. மயிர் போன்ற, இழைவடிவான.
Capillarity
n. மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.