English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Capillary
n. மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய.
Capital
-1 n. தலைநகர், அரசியல் மைய இடம், முதலீடு, நிலைமுதல், இடுமுதல், மூலதனம், முதலாண்மை, மூலதனத்துறை, மூலதனத்தளம், முதலாளித்துவம், மூலதளம், மூல ஆதாரம், முகட்டெழுத்து, பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு, முதன்மைச் செய்தி, முக்கியமானது. (பெ.) தலைமையான, தலைசிறந்த
Capital
-2 n. (க.க) தூண் தலைப்புறுப்பு, ஏட்டுப் பெரும் பிரிவு.
Capitalism
n. நிலைமுதலுடைமை, முதலாண்மை, முதலீட்டாட்சி, முதலீட்டாட்சிச்சூழல், முதலாளித்துவம், தனியுடைமை, முதலாளித்துவ ஆதிக்கம்.
Capitalist
n. முதலாளி, முதலீட்டின் மூலம் ஆதாயமும் ஆற்றலும் பெறுபவர், (பெ.) முதலாளிக்குரிய, முதலாளித்துவஞ்சார்ந்த.
Capitalistic
a. முதலாளிக்குரிய, முதலாளித்துவம் சார்ந்த.
Capitalization
n. முதலீடாகப் பயன்படுத்தல், தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல், வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல்.
Capitalize
v. முதலிடு, முதலீடளி, முதலீடாக மாற்று, பணமாக்கு, முழுதும் பயன்படுத்திக்கொள், தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து, வருதொகையின் உடனடி மதிப்புக் காண், உடனடிப் பணம் பெறு.
Capitally
adv. முக்கியமாக, சிறப்பாக, முதல்தரமாக, உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
Capitano
n. ஊர்த்தலைவன், தலையாரி.
Capitate, capitated
(தாவ.) தனித் தலைப்புப்பகுதியுடைய, தலையுறுப்புடைய, கொத்துமலருடைய.
Capitation
n. தலை எண்ணிக்கை, தலைவரி, ஆள்வரி, தலைவரி பிரிப்பு.
Capitivate
v. கவர்ச்சி செய், உளங்கவர், மருட்சியூட்டு.
Capitol
n. ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில், அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Capitolian
a. ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயிலுக்குரிய.
Capitoline
a. ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய, ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
Capitular
n. கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம், கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்இ (பெ.) திருச்சபைக் குழுவுடைய.
Capitulary
n. மன்னர் கட்டளைத் தொகுதி, அவசரச் சட்டத் தொகுதி, தலைப்பு, திருச்சபைக்குழு உறுப்பினர், (பெ.) திருச்சபைக் குழுவுக்குரிய.
Capitulate
v. கட்டுப்பாட்டின்மீது சரணடை, உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு, சமரசம் செய், உடன்படு.