English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carney
n. முகமனுரை, (வி.) (பே-வ.) கெஞ்சு, நயம்படவுரை.
Carnifex
n. தூக்குத்தண்டனை நிறைவேற்றுபஹ்ர்.
Carnification
n. (மரு.) எலும்பு-ஈரல் முதலிய உறுப்புக்கள் தசை அல்லது தசைநார்போன்ற பொருளாக மாற்றமடைதல்.
Carnificial
a. தூக்கிலிடுபவருக்குரிய, கொலைகாரத்தனமான.
Carnify
v. (மரு.) எலும்பு-ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று, தசை அல்லது தசைநார் போன்று மாறுபடு.
Carnival
n. கேளிக்கைக் கொண்டாட்டம், வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா, களியாட்டம்.
Carnivora
n. pl. ஊன் தின்னும்பாலுணியினம்.
Carnivore
n. புலால் உண்ணும் விலங்கு அல்லது செடி.
Carnivorous
a. புலால் உண்ணுகிற.
Carnosity
n. (மரு.) உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி.
Carob
n. கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை.
Caroche
n. நான்கு சக்கர வண்டி.
Carol
n. மகிழ்ச்சிப் பாடல், ஆனந்தக்களிப்பு, சிந்து, கிறித்துமஸ் பாடல், பறவைகளின் இன்னிசைப்பு, (வி.) சிந்து பாடு, களித்துக் கூடிப்பாடு, மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு.
Caroline
a. பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய, இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Carom
n. மேடைக்கோல் பந்தாட்டத்தில் இரட்டை வெட்டு, ஆட்டக்காரருடைய பந்து அடுத்தடுத்து இரண்டு பந்துகளை இடித்தல்.
Carotene
n. செடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்).
Carotid
n. கழுத்துக் குருதி நாளங்கள் இஜ்ண்டில் ஒன்று, (பெ.) தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் நாடிகளில் ஒன்றுக்கு உரிய, கழுத்துக் குருதிநாளத்துக்கு அண்மையில் உள்ள.
Carousal
n. குடியாட்டு, மதுபான விருந்து.
Carouse
n. குடிமயக்கம், (வி.) வெறியாட்டயர், மிகுதியாகக் குடி.
Carousel
n. வீர ஆட்டப்பந்தயக் களரி, பொதுப்பந்தய விளையாட்டுக் காட்சி.