English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carp
-1 n. நன்னீர் வாழும் குள மீன்வகை.
Carp
-2 v. குற்றங்காண், குறை கூறு, வைது உரை.
Carpal
n. மணிக்கட்டு எலும்பு, (பெ.) மணிக்கட்டுக்குரிய, மணிக்கட்டு எலும்பைச் சார்ந்த.
Carpel
n. முசலி மூலம், சூலறை, சூலணு.
Carpellary
a. சூலணுக்குரிய, சூலணுக்கள் கொண்ட.
Carpenter
n. தச்சர், மரவேலை செய்பவர், (வி.) தச்சு வேலை செய்.
Carpenter-ant
n. மரத்தைத் துளைத்துக் கூடாக்கிவிடும் எறும்புவகை.
Carpenter-bee
n. மரத்தைத் துளைத்துக் கூடாக்கும் இயல்புடைய தேனீ வகை.
Carpentry
n. தச்சு, மரவேலை.
Carpentry works
தச்சுப் பணிகள்
Carpet
n. விரிப்பு, கம்பளம், சமுக்காளம், மேசை விரிப்பு, புல் பரப்பு, மலர்ப்படுக்கை, (வி.) கம்பளம் விரி, மூடிப்பரப்பு, கவிந்துமூடு, கண்டிக்க வரவழை, கண்டி.
Carpet-bag
n. பயணப்பை, முன்பு சமுக்காளத்துணியினால் செய்யப்பட்ட வழிப்போக்கர் பை.
Carpet-bagger
n. பையோடு பயணம் செய்பவர், தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர், அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர், தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி.
Carpet-bed
n. சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Carpet-dance
n. முறைப்படி நடவா ஆடல், சாதாரண ஆடல்.
Carpeting
n. கம்பள முதற் பொருள், கம்பளத்தொகுதி.
Carpet-knight
n. வீரச்செயல்களினாலன்றி அரசவையின் ஆதரவினால் வீரத்திருத்தகை பட்டம் பெற்றவர், பெண்களை வட்டமிட்டுத் திரிபவர், அடுக்களைப் படைவீரர்.
Carpet-moth
n. சமுக்காளப்பூச்சி, சமுக்காளம் போன்ற வரிகளையுடைய விட்டில் பூச்சி.
Carpet-rod
n. படிக்கட்டுக்கழி, படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.
Carphology
n. உணர்வு தன்வசமிழந்த நிலையில் படுக்கைத் துணி முதலியவறைறைத் தாறுமாறாகப் பிடித்திழுத்தல், சன்னிச்சேட்டை.