English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carlylean
a. தாமஸ் கார்லைல் (1ஹ்ஹீ5-1க்ஷ்க்ஷ்1) இலக்கிய நடையை ஒட்டிய.
Carlylese
n. தாமஸ் கார்லைலின் ஆற்றல் மிக்க இலக்கியப்பாணி.
Carlylesque
a. ஆங்கில எழுத்தறிஞர் தாமஸ் கார்லைலின் இயல்புக்குரிய.
Carlylism
n. தாமஸ் கார்லைலின் கோட்பாடு, கார்லைலின் பாங்கு.
Carmagnole
n. (பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல், பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
Carman
n. விசைக்கல வலவர், மோட்டார் ஓட்டுபவர், வண்டியோட்டி.
Carmelite
n. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Carminative
n. (மரு.) வயிற்றுப்புசத்திற்கு மருந்து, (பெ.) வயிற்றுப்புசம் அகற்றுகிற.
Carmine
n. இந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள், இந்திரகோபப்பூச்சியின் நிறம், கசிவப்பு மை, (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள.
Carnage
n. படுகொலை, நுழிலாட்டு.
Carnal
a. உடலின்பத்துக்குரிய, சதைபற்றிய, இம்மை வாழ்விற்குரிய, பாலுணர்ச்சி சார்ந்த, கடவுட்டன்மைபெறாத, உலோகாயத, (வி.) உடலின்பத்துக்குரிய செயல்புரி.
Carnalism
n. சிற்றின்ப வேட்கை, உலோகாயதம்.
Carnalist
n. சிற்றின்ப வேட்கையர், உலகப் பொருள்களில் உழல்பவர்.
Carnality
n. சிற்றின்ப நாட்டம், உடலின்ப வேட்கை, உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை.
Carnalize
v. உடலின்பத்துக்குரியதாக்கு, உலோகாயதப்படுத்து.
Carnal-minded
a. உலகப் பொருள்களில் நாட்டமுள்ள.
Carnassial
n. கோரைப்பல், ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல், (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த.
Carnation
-2 n. இரட்டடுக்கான இதழ்களையுடைய மஷ்ர்ச் செடிவகை.
Carnation,
-1 n. இறைச்சி நிறம், இளஞ்சிவப்பு நிறம், (பெ.) இளஞ்சிவப்பு நிறமுள்ள.
Carneous
a. கொழுத்த, தசைக்குரிய, தசை போன்ற.